காணொளி: பைக் சீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.56 லட்சம் பணம் பறிமுதல்
காணொளி: பைக் சீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.56 லட்சம் பணம் பறிமுதல்
கோவை மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள வேலந்தாவளம் சோதனைச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சந்தேகத்துக்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த கேரளாவைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் சோதனையிட்டனர்.
வாகனத்தின் சீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஆவணமில்லாத சுமார் 56 லட்ச ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



