முகேஷ் அம்பானி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் யார் யார்? - பிரத்யேக புகைப்படங்கள்

பல மாத ஆடம்பரமான கொண்டாட்டங்களுக்குப் பிறகு, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகனின் திருமண விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 12) மும்பையில் நடைபெற்றது.

முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி, தொழிலதிபர்கள் வீரேன் - ஷைலா மெர்ச்சன்ட் தம்பதியின் மகள் ராதிகா மெர்ச்சன்டை திருமணம் செய்து கொண்டார்.

கோலாகலமாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்ற இத்திருமண விழாவில் பல சர்வதேசப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அமெரிக்க மல்யுத்த வீரரும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனாவும் இத்திருமணத்தில் காணப்பட்டார். முன்னாள் இங்கிலாந்து பிரதமர்கள் டோனி பிளேயர் மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

திரைப்பட நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான் முதல் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, கிரிக்கெட் வீரர்கள் தோனி, கம்பீர், ஹர்திக் பாண்டியா என பல பிரபலங்கள் இதில் பங்கேற்றனர்.

திங்கட்கிழமை வரை, அதாவது விழாக்கள் முழுமையாக முடியும் வரை, மும்பையில் உள்ள முக்கிய சாலைகளில் ஒருநாளைக்கு பல மணி நேரம் மக்கள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் வருகை பற்றிய விவரங்கள் நிமிடத்திற்கு நிமிடம் பகிர்ந்து கொள்ளப்படுவதால், திருமணத்தைப் பற்றிய பதிவுகள் சமூக ஊடகங்களில் குவிந்துள்ளன.

இந்தத் திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்களின் படங்களை இங்கு காணலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)