காணொளி: அசர்பைஜானிலும் விமான நிலையம் மீது இரான் டிரோன் தாக்குதலா?

காணொளிக் குறிப்பு, காணொளி: டிரோன் தாக்குதலுக்கு உள்ளான அசர்பைஜான் விமான நிலையம்
காணொளி: அசர்பைஜானிலும் விமான நிலையம் மீது இரான் டிரோன் தாக்குதலா?

அசர்பைஜான் விமான நிலையம் டிரோன் தாக்குதலுக்கு உள்ளான காட்சிகள் இவை.

இரானிய டிரோன் ஒன்று விமான நிலையத்தின் ஒரு கட்டடத்தை தாக்கியதாகவும், மற்றொன்று அருகில் ஒரு பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் விழுந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதில் குறைந்தது 4 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் நடத்தியதை இரான் மறுத்துள்ளது. ஆனால் அசர்பைஜான் அதிபர், இரான் மீது பயங்கரவாதக் குற்றம் சுமத்தியதோடு, இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியதாக ஏ.எஃப்.பி (AFP) செய்தி வெளியிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு