காணொளி: 'புதினுக்காக 40 நிமிடம் காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர்' - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'புதினுக்காக 40 நிமிடம் காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர்' - என்ன நடந்தது?

சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையேயான சந்திப்பு விவகாரம் பெரும் பேசுபொருளாகி உள்ளது.

புதினை சந்திப்பதற்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என ஊடக செய்திகள் கூறின. உண்மையில் என்ன நடந்தது?

துர்க்மெனிஸ்தானின் தலைநகரான ஆஷ்கபாத்தில் நடந்த 'அமைதி மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான வழிகள்' குறித்த சர்வதேச மாநாட்டில் ஷபாஸ் ஷெரீஃப், புதின், இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், துருக்கி அதிபர் எர்துவான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ரஷ்ய ஊடகமான ஆர்டி இந்தியா (RT India) பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ரஷ்ய அதிபர் புதினுக்காக 40 நிமிடங்கள் காத்திருந்ததாகவும், பின்னர் எழுந்து நேராக, துருக்கி அதிபர் எர்துவானுடன் புதின் பேசிக் கொண்டிருந்த அறைக்குச் சென்றதாகவும் கூறியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு