You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஒரு கருவி மூலம் மூளையில் நினைவாற்றலை தூண்ட முடியுமா?
ஒருவரின் இயக்கத்தை பாதிக்கும் பார்கின்சன் போன்ற நோய்களுக்கு Deep brain stimulation எனப்படும் ஆழ்மூளை தூண்டல் ஒரு சிகிச்சை முறையாக பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சிகிச்சையில் மூளைக்குள் சில மின்கம்பிகள் பொருத்தப்படும்.
அந்த மின்கம்பிகள் மின் துடிப்பை உருவாக்கும் சாதனத்துடன் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சாதனம், சரியாக செயல்படாத மூளையின் பகுதிகளை தூண்டும் விதமாக மீச்சிறு மின்னோட்டங்களை அனுப்பும்.
இது, நோயாளி மீண்டும் இயங்குவதற்கு உதவிபுரியும்.
இதேபோன்ற தொழில்நுட்பம் மறதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமா என்பது குறித்து விஞ்ஞானிகள் மும்முரமாக ஆய்வு செய்துவருகின்றனர்.
இதற்கு ஹிப்போகேம்பல் நியூரல் பிராஸ்தெடிக் (hippocampal neural prosthetic) என பெயர்.
மூளையில் நினைவுகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் பகுதியே ஹிப்போகேம்பஸ். இந்த முறையில், பொருத்தப்பட்டுள்ள மின்கம்பிகள் ஹிப்போகேம்பஸை குறிவைத்து செயல்படும்.
இந்த முறை, வலிப்பு நோய் காரணமாக மறதியால் அவதிப்படுபவர்களுக்கு உதவுவதில் சற்று நம்பிக்கை அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இது ஆரம்பம் மட்டுமே.
ஆனால், இதேபோன்ற சிகிச்சை, மற்ற மறதி பிரச்னைகளுக்கும் ஒருநாள் உதவ முடியுமா?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு