You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாயின் உதவியுடன் இந்தியாவில் முதல்முறை சட்டபூர்வமாக திருமணம் செய்த தமிழக திருநங்கை
2019 ஆம் ஆண்டில், ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நீதிமன்ற தீர்ப்பிற்குப் பின்னர், தமிழ்நாட்டில் சட்டப்பூர்வமாக திருமணமான முதல் திருநங்கை என்ற பெருமையை ஸ்ரீஜா பெற்றார்.
தற்போது, 'அம்மா'ஸ் ப்ரைட்' (Amma's pride) என்ற புதிய ஆவணப்படம், ஸ்ரீஜாவின் திருமணத்திற்கு அரசு அங்கீகராம் கிடைக்க வேண்டும் என்று அவர் நடத்திய போராட்டத்தையும், அதில் அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது அம்மா வள்ளியின் முக்கியமான பங்கையும் விவரிக்கிறது.
தனது மகளை கட்டி அணைத்துக்கொண்டே,"ஸ்ரீஜா, எனக்கு கிடைத்த வரம்," என்று 45 வயதான வள்ளி பிபிசியிடம் கூறுகிறார்.
தமிழ்நாட்டின் தூத்துக்குடியைச் சேர்ந்த 25 வயதான ஸ்ரீஜா, "என்னிடம் இருப்பது எல்லா திருநர் சமூகத்தினரிடமும் இல்லை என்பது எனக்குத் தெரியும்," என்கிறார்.
"எனது கல்வி, என் வேலை, என் திருமணம் போன்ற அனைத்தும் எனது அம்மா அளித்த ஆதரவினால்தான் சாத்தியமாயிற்று."
தமிழ்நாட்டில், சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட முதல் திருநங்கை என்ற ஸ்ரீஜாவின் தனித்துவமான அனுபவத்தை எடுத்துக்காட்டும் வகையில் 'அம்மா'ஸ் ப்ரைட்' என்னும் ஆவணப்படம் வெளியாக உள்ளது. இதில் ஸ்ரீஜா மற்றும் அவரது அம்மா முதன்முறையாக தங்களது கதையை பகிர்ந்து கொள்கிறார்கள்.
தயாரிப்பு: மேகா மோகன், பிபிசி உலக செய்திகள்
ஸ்ரீஜாவின் கதை காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.