நீலகிரி: டாஸ்மாக் கடையில் மதுவுக்கு கூடுதல் விலை - ஊழியர்களை தாக்கிய தந்தை, மகன்

காணொளிக் குறிப்பு,
நீலகிரி: டாஸ்மாக் கடையில் மதுவுக்கு கூடுதல் விலை - ஊழியர்களை தாக்கிய தந்தை, மகன்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் டாஸ் மாக் கடையில் மதுபானத்தை கூடுதல் விலைக்கு விற்றதாக கூறி தந்தையும் மகனும் ஊழியர்களை தாக்கியுள்ளனர்.

மது பாட்டிலைத் திரும்பி அளித்தால் 10 ரூபாய் வழங்கும் திட்டம் சில டாஸ்மாக் கடைகளில் அமலில் உள்ளது. இதன் அடிப்படையில் ஊழியர், ஒரு நபரிடம் மொத்த பணத்திற்கு மேல் 10 ரூபாய் கூடுதலாக கேட்டுள்ளார்

இதனையடுத்து அந்த நபர் கோபப்பட்டு தனது மகனுடன் வந்து கடை ஊழியர்களை தாக்கியுள்ளனர். குன்னூர் காவல் துறையினர் தந்தை மற்றும் மகன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு