You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஸ்மார்ட்போனில் பழைய கால் செட்டிங்ஸ் திரும்புவது எப்படி? எளிய விளக்கம்
நீங்க ஆண்டராய்ட் ஸ்மார்ட்போன் பயனராக இருந்தால் கூகுள் போன் செயலிக்கு கூகிள் வெளியிட்டிருக்கும் புதிய அப்டேட் பத்தி கேள்விப்பட்டிருப்பீர்கள்
மொபைல் செயலியினுடைய User Interface மற்றும் அழைப்புகளை ஏற்கும் அம்சம் இந்த அப்டேட்டால் முழுவதுமாக மாறியிருக்கிறது. கூகுள் போன் செயலியை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கெல்லாம் இந்த மாற்றங்கள் வந்திருக்கும்.
இந்த அப்டேட் பலருக்கு சௌகரியமானதாக இல்லாததால் இதனை எப்படி நீக்குவது என பலருக்கும் கேள்விகள் உள்ளன.
ஒரே பட்டனில் பழைய செட்டிங்ஸிற்கு மாறுவதற்கான வழி இல்லை. புதிய டிசைன், ஆக்சஸிபிலிட்டி மற்றும் ஃபெர்பார்மன்ஸை மேம்படுத்துவதில் கூகுள் கவனம் செலுத்தி வருகிறது.
பழைய டயலரை மொபைலில் எங்கு தேர்வு செய்ய முடியும்?
- மொபைலில் செட்டிங்ஸை தேர்வு செய்து ஆப்ஸை தேர்வு செய்யுங்கள்
- இப்போது ஃபோன் ஆப்-ஐ தேர்வு செய்யுங்கள்
- திரையில் வலது பக்கத்தின் உச்சியில் உள்ள மூன்று புள்ளிகளை சொடுக்கவும், அதில் 'அன்இன்ஸ்டால் அப்டேட்ஸை' தேர்வு செய்ய வேண்டும்.
- இந்த செயலியை ஃபேக்டரி வெர்ஷனுக்கு மாற்ற வேண்டுமா என்பதில் ஓகேவை தேர்வு செய்ய வேண்டும்.
அதாவது, இந்த செயலியை நீக்கிவிட்டு பழைய ஃபேக்டரி வெர்ஷனுக்கு செல்ல வேண்டுமா எனக் கேட்கும். ஒகே என்பதை தேர்வு செய்தவுடன் புதிய அப்டேட் நீக்கப்பட்டு, ஸ்மார்ட்போனின் இயங்குதளம் (Operating System) பழைய வெர்ஷனுக்கு சென்றுவிடும்.
இவை போக நீங்கள் வேறு சில வழிகளிலும் உங்களால் மாற்ற முடியும்
மொபைலின் டிஃபால்ட் செயலி பட்டியலில் உள்ள மொபைல் செயலி மாறியிருப்பதால் தான் காலிங் திரை அடிக்கடி மாறுகிறது.
செட்டிங்கிஸ் - ஆப்ஸ் - டிஃபால்ட் ஆப்ஸ் - போன் ஆப் (Settings-Apps - Default Apps - Phone App) என்கிற செட்டிங்ஸில் சென்று உங்கள் விருப்பப்பட்ட போன் செயலியை தேர்வு செய்யலாம் என கூகுள் ஆண்ட்ராய்ட் உதவி கையேடு கூறுகிறது.
இவ்வாறு செய்வதன் மூலம் காலிங் திரை நாம் டிஃபால்ட் செயலியாக வைத்ததைப் போல இருக்கும்.
நீங்கள் போன் பை கூகுளை (Phone by Google) பயன்படுத்த விரும்பினால் அதனை செட் பை டீஃபால்ட் (set by default) என தேர்வு செய்ய வேண்டும். இதனை பின்னர் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் எந்த செயலியை வேண்டுமானாலும் டிஃபால்ட் டயலராக தேர்வு செய்யலாம், அதன் மூலம் அழைப்புகள் தொடர்பான எல்லா வேலைகளையும் செய்து கொள்ளலாம். இதனால் தான் வெவ்வேறு போன்களில் காலிங் திரைகள் வெவ்வேறாக தெரிகின்றன.
போன் செயலியின் புதிய அப்டேட்டை நீக்கினால் அவர்களின் கால் ஹிஸ்டரியும் அழிந்துவிடும் என பலரும் அச்சப்படுகின்றனர்.
கால் லாக் தரவுகள் அழிந்துவிடுமா என்பது பற்றி கூகுளில் அதிகாரப்பூர்வ பக்கத்தில் எந்த தெளிவான தகவலும் இல்லை. எனவே போன் சிஸ்டமில் கால் ஹிஸ்டரி பாதுகாப்பாக இருக்கும் என நம்பலாம், ஆனால் கூகுள் தான் அதனை உறுதிப்படுத்த வேண்டும்.
புதிய அப்டேட்டை அன் இன்ஸ்டால் செய்த ஒரு பயனர், கால் ஹிஸ்டரியையோ அல்லது இதர தரவுகளையோ இழக்கவில்லை என்றும் அனைத்து தகவல்களும் முன்பிருப்பதைப் போல இருப்பதாகவும் பிபிசியிடம் தெரிவித்தார்.
அதை இந்தக் காணொளியில் முழுமையாக காணலாம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு