நேபாள வெள்ளத்தில் 190 பேர் பலி, இந்தியாவிலும் பாதிப்பு - காணொளி

நேபாள வெள்ளத்தில் 190 பேர் பலி, இந்தியாவிலும் பாதிப்பு - காணொளி

நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் அந்நாட்டில் 190-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கோசி மற்றும் கண்டக் (Gandok) ஆறுகளில் கரைபுரண்டோடும் வெள்ளம் இந்தியாவின் பிகார் மாநிலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் நேபாளத்தின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியேறி முகாம்கள் தஞ்சம் அடைந்தனர்.

பிகாரில் பல பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)