You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"வேப்பமரத்தில் உரசிய விமான சக்கரம்" - ஆமதாபாத் விபத்தை நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன?
விமானம் பேருந்து நிலையத்தில் விழாமல் தவிர்க்க விமானி முயன்றார் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர்வாசி ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், "விமானியை நான் வணங்குகிறேன். ஏனென்றால் விமானத்தில் சக்கரம் இங்கிருந்த வேப்பமரத்தில் உரசியது. மெகானிநகர் பகுதியில் விமானம் கீழே இறங்கியது. அங்கிருந்த பேருந்து நிலையத்தில் விமானம் விழுந்திருக்கும். ஆனால், விமானி விமானத்தை மேல்நோக்கி திருப்பினார். அவர் ஒரு திறந்தவெளியில் விமானத்தை தரையிறக்க முயன்றார். ஆனால் வெப்ப மரங்களும் கட்டடங்களும் அதற்கு தடையாக இருந்தன. மரத்தில் மோதிய விமானம் பி ஜே மருத்துவ கல்லூரியின் மாணவர்கள் தங்கியிருந்த கட்டடத்தின் மீது விழுந்தது." என்றார்.
அப்படியென்றால், விமானம் விழுவதற்கு முன் ஒருமுறை கீழே இறங்கியதா? எனப் பத்திரிகையாளரின் கேள்விக்குப் பதில் அளித்தவர், "மெகானிநகர் பேருந்து நிலையம் அருகே விமானம் கீழே இறங்கியது. விமானியை வணங்குகிறேன். விமானி எவ்வளவோ முயன்றார். அவர் விமானத்தை மேல்நோக்கி திருப்பினார் ஆனால் பி ஜே மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த கட்டடம் அருகே இருந்த வெப்ப மரங்களின் மீது உரசியது. முதலில் விமானம் மரத்தில்தான் உரசியது. அதன் பிறகு தான் விமானம் வெடித்தது." எனத் தெரிவித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு