8000 ஆண்டு பழமையான வாழ்விட எச்சங்கள் - ஏரியில் மூழ்கிய நிலையில் கண்டெடுப்பு
8000 ஆண்டு பழமையான வாழ்விட எச்சங்கள் - ஏரியில் மூழ்கிய நிலையில் கண்டெடுப்பு
ஐரோப்பாவில் 'ஏரியின் மீது கட்டப்பட்ட மிகப்பழைய வாழ்விடம்' ஒன்று நீருக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் ஆய்வாளர்கள் இங்கிருந்து 8000 ஆண்டுகள் பழமையான பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.
ஒன்றாக வாழ்ந்த ஒரு வேட்டை மற்றும் விவசாய சமூகத்தின் அடையாளங்களாக இவை கருதப்படுகின்றன
வீடுகள் கட்ட பயன்படுத்தப்பட்ட மரக்கட்டைகள் மூன்று மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வன மற்றும் வீட்டு விலங்குகளின் எலும்புகளும் செம்பு சாமான்கள் மற்றும் வேலைப்பாடுகள் கொண்ட செராமிக் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அல்பேனியா மற்றும் வடக்கு மேசிடோனியாவில் பகிர்ந்திருக்கும் ஓஹ்ரிட் ஏரிதான் ஐரோப்பாவின் பழமையான ஏரி. பல ஆய்வுகளின்படி அதன் வயது 10 லட்சம் ஆண்டுகளாக இருக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



