இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த யாஸ்மின் 'லேடி டிடெக்டிவ்' ஆக முடிவெடுத்தது ஏன்?

காணொளிக் குறிப்பு, இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த யாஸ்மின் 'லேடி டிடெக்டிவ்' ஆக முடிவெடுத்தது ஏன்?
இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த யாஸ்மின் 'லேடி டிடெக்டிவ்' ஆக முடிவெடுத்தது ஏன்?

“நீயெல்லாம் ஒரு டிடெக்டிவா என்பது போல இன்னும் என்னைக் கேலி செய்வோர் இருக்கத்தான் செய்கிறார்கள். முன்பெல்லாம் தனிமையில் இந்தக் கேலிகளை நினைத்து அழுவேன். இப்போது அவற்றைக் கண்டுகொள்வதில்லை” “பெண்கள் பெரும்பாலும் தொடாத ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். சாதித்திருக்கிறேன்” என்கிறார் யாஸ்மின்.

திரைப்படங்களிலும், புதினங்களிலும் கற்பனை பாத்திரங்களாக வரும் பெண்களின் நிஜம் யாஸ்மின். இன்று தமிழ்நாட்டில் பரவலாக அறியப்படும் பெண் டிடெக்டிவ். அதாவது துப்பறிவாளர்.

யாஸ்மின்

பட மூலாதாரம், Yasmin

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: