கரை புரளும் ஆற்றுவெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து இவர்கள் எங்கே செல்கிறார்கள்?

கரை புரளும் ஆற்றுவெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து இவர்கள் எங்கே செல்கிறார்கள்?

காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு புருண்டி நாட்டுக்கு தப்பி வருகின்றனர்.

இரு நாட்டையும் பிரிக்கும் ருசிசி ஆற்றின் 300 மீட்டர் அகலத்தையும், 10 மீட்டர் ஆழத்தையும் கடந்து புருண்டியில் தஞ்சம் அடைகின்றனர்.

தற்போது M23 போராட்டக்காரர்கள் டி.ஆர். காங்கோ மக்களை அவர்களின் படையில் கட்டாயமாக இணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால் இதில் இருந்து தப்பித்துக் கொள்ள இவர்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர்.

இளைஞர்களுக்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த சவாலான சூழலில் குழந்தைகளும் ஆற்றை நீந்திக் கடக்கின்றனர்.

இவர்கள் புருண்டியில் தஞ்சம் புகக் காரணம் என்ன? டி.ஆர். காங்கோவில் என்ன நடக்கிறது? முழு விபரமும் இந்த வீடியோவில்!

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)