காதலர் தினம்: ஓநாய்களின் இரைகளுக்கு உங்கள் முன்னாள் காதலரின் பெயரை வைக்கலாம் - புதுவித முயற்சி
ஓநாய்களுக்கு வீசப்படும் இரைகளுக்கு உங்கள் முன்னாள் காதலரின் பெயரை வைப்பீர்களா அல்லது ஒரு கரப்பான் பூச்சிக்கு உங்கள் முன்னாள் காதலரின் பெயரை வைப்பது எப்படி இருக்கும்?
பொதுவாக காதலர் தினம் என்பது, தம்பதிகளுக்கு காதலைக் கொண்டாடுவதற்கான நாள். ஆனால், முடிந்துபோன ஒரு உறவைக் கொண்டாடவும் சில வித்தியாசமான வழிகள் உள்ளன.
நிதி திரட்டுவதற்கான முயற்சியாக, பென்சில்வேனியாவின் ஒரு காட்டுயிர் சரணாலயம், உங்கள் முன்னாள் காதலரின் பெயர் கொண்ட உணவுகளை ஓநாய்களுக்கு வீச அனுமதிக்கிறது.
டெக்சாஸின் உயிரியல் பூங்காவும், இதேபோன்ற நிதி திரட்டுவதற்கான ஒரு திட்டத்தை வைத்துள்ளது. சிறிய கட்டணம் செலுத்தி, கரப்பான் பூச்சி அல்லது எலிக்கு முன்னாள் காதலரின் பெயரை வைக்கலாம். பின்னர், அவை விலங்குகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



