You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிர்வாணப் படங்கள் மூலம் இந்தியர்களின் வாழ்க்கையை 'நாசமாக்கும்' கடன் செயலிகள் - பிபிசி புலனாய்வு
உடனடி கடன் வழக்கும் செயலிகள் எளிமையாக நீங்கள் கடன் பெறலாம் உறுதியளிக்கின்றன. லட்சக்கணக்கான இந்தியர்கள் நிதிக் கடன் பெற்றுள்ளனர். ஆனால் பலர், அச்சுறுத்தி பணம் பறிக்கும் கும்பல், மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களின் வலையில் சிக்கியுள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அறுபதுக்கும் அதிகமான இந்தியர்கள், கடன் செயலிகளின் அச்சுறுத்தல் மற்றும் அவமானப்படுத்தும் நிகழ்வுகளால் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர் என்பது பிபிசி ஆவணப்பட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால், இந்த மோசடி வேலை எப்படி நடைபெறுகிறது? இந்திய வாடிக்கையளர்களுக்கு நடக்கும் துன்புறுத்தலின் பின்னணியில் சீன முதலீட்டாளர்கள் இருக்கிறார்களா? இந்தத் துயரத்தின் மூலம் ஆதாயம் அடையும் நபர்கள் யார்?
கடன் செயலி மோசடிகள் எப்படி நடக்கிறது என்பதையும் பயம், அவமானம், துயரம் மூலம் பணம் சம்பாதிக்கும் நபர்கள் யார் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்ட BBC Eye ஒரு ரகசிய ஆபரேஷனை நடத்தியது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)