காணொளி: பிபிசி இயக்குநர் ஜெனரல், செய்திப்பிரிவு சிஇஓ ராஜிநாமா
பிபிசி பனோரமா ஆவணப்படத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பேச்சை எடிட் செய்து பார்வையாளர்களை தவறாக வழிநடத்தியதாக எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்திகள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜிநாமா செய்திருக்கின்றனர்.
2021-ஆம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவில் நடந்த கேபிடல் ஹில் கலவரங்களைத் தூண்டும் விதமாக டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக பேசியதாகத் தோன்றும் வகையில், அவரது உரையின் இரு பகுதிகள் எடிட் செய்யப்பட்டு பனோரமா நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டதாகக் கசிந்த பிபிசியின் உள் குறிப்பு (internal BBC memo) அடிப்படையில் 'தி டெலிகிராப்' பத்திரிகை செய்தி வெளியிட்டது.
பிபிசியின் இயக்குநர் ஜெனரல் மற்றும் செய்திப் பிரிவு சிஇஓ ஆகிய இருவரும் ஒரே நாளில் ராஜிநாமா செய்திருப்பது இதுவரையிலும் நடந்திராத ஒன்று.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



