காணொளி: பூனை அளவே உள்ள இந்த மான்களுக்கு என்ன ஆபத்து?

காணொளிக் குறிப்பு, பூனை அளவே உள்ள இந்த மான்களுக்கு என்ன ஆபத்து?
காணொளி: பூனை அளவே உள்ள இந்த மான்களுக்கு என்ன ஆபத்து?

உலகின் மிகச்சிறிய இந்த மான்கள் எளிதில் பாதிக்கக் கூடியதாக உள்ளன. பூனையின் அளவுள்ள, தென் அமெரிக்காவை சேர்ந்த மான் இனமான (புடு) இவை கார்கள், நாயால் பாதிக்கப்படுகின்றன.

உள்ளூர் மீட்புக்குழு ஆண்டுக்கு 50 மான்களுக்கு சிகிச்சை அளிக்கிறது.

கால்நடை மருத்துவர் ஜேவியெரா லோபெஸ் கூறுகையில், "குளிர், வசந்த காலத்தில் கர்ப்பமான மான்கள் அதிக எடையுடன் இருப்பதால் தெரு நாய்கள் தாக்குகின்றன. ஆகஸ்ட் மாதங்களில் நாய்க்கடிக்கு அதிக மான்கள் இலக்காகின்றன" என்றார்.

மெதுவான போக்குவரத்து, தெரு நாய்களை கட்டுப்படுத்துவது போன்ற கோரிக்கைகளை அமைப்புகள் விடுக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.