பூங்காவின் 'ராணியாக' வலம் வந்த கலபகோஸ் ஆமை 141 வயதில் மரணம்

பூங்காவின் 'ராணியாக' வலம் வந்த கலபகோஸ் ஆமை 141 வயதில் மரணம்

இலை தழைக்களை உண்ணும் இந்த ஆமையின் பெயர் கிராமா. சுமார் 141 வயதான இந்த ஆமை நவம்பர் 20 ஆம் தேதி அன்று உயிரிழந்ததாக சான் டியாகோ உயிரியல் பூங்கா அறிவித்தது.

கலபகோஸ் (Galápagos) ஆமை இனத்தைச் சேர்ந்த கிராமா, சான் டியாகோ உயிரியல் பூங்காவின் மிகவும் வயதான விலங்காக கருதப்படுகிறது.

கிராம்மா உள்பட பல கலபகோஸ் ஆமைகள் கிட்டதட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், அதாவது 1928 மற்றும் 1931ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்த உயிரியல் பூங்காக்கு கொண்டு வரப்பட்டன என்று சான் டியாகோ உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது

சமீபத்தில் இந்த ஆமை வைரல் ஆகத் தொடங்கியதுடன், 'பூங்காவின் ராணி' என்றும் பார்வையாளர்களால் அழைக்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு