You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செளதி அரேபியா: முதல் மதுபானக் கடை திறக்க பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் முடிவு செய்தது ஏன்?
சௌதி அரேபியா தலைநகர் ரியாத்தில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்காக மது விற்பனை செய்ய ஒரு கடையைத் திறக்கப்போவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 70 ஆண்டுக்கால வரலாற்றில் சௌதி அரேபியாவில் மது விற்கப்பட இருப்பது இதுவே முதல்முறை.
ரியாத்தில் திறக்கப்படும் இந்த மதுபானக் கடையின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலும் தூதரகங்களில் பணியாற்றுபவர்களே இருப்பார்கள்.
பல்வேறு நாடுகளின் தூதரக ஊழியர்கள பல ஆண்டுகளாக சீல் செய்யப்பட்ட மதுபானங்களை இறக்குமதி செய்து வருகின்றனர். அவை அரசுமுறை பேக்கேஜ்கள் என அழைக்கப்படுகின்றன.
தற்போது திறக்கப்படவுள்ள இந்த மதுபானக் கடையின் மூலம் சட்டவிரோத மது வியாபாரம் தடுக்கப்படும் என சௌதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சௌதி அரேபியாவில் கடந்த 1951ஆம் ஆண்டில், அரசர் அப்துல் ஆஸிஸின் மகன் மது அருந்துவது தொடர்பான சர்ச்சையில் பிரிட்டிஷ் தூதரக அதிகாரியை சுட்டுக்கொன்றார். அதைத் தொடர்ந்து 1952ஆம் ஆண்டு முதல் சௌதியில் மதுபானம் தடை செய்யப்பட்டது.
ஏ.எஃப்.பி, ராய்ட்டர்ஸ் செய்தி முகமைகள்இன்படி, இந்தப் புதிய மதுக்கடை ரியாத்தின் தூதரக குடியிருப்பில் திறக்கப்படும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)