யூரோ வரலாற்றில் மிக இளம் வயதில் கோல் அடித்த லெமின் யமால்
லெமின் யமால் யூரோ வரலாற்றில் மிக இளம்வயதில் கோல் அடித்தவராகியுள்ளார். செவ்வாய்க்கிழமை பிரான்ஸுக்கு எதிரான அரை இறுதியில் நம்பமுடியாடியாத கோல் ஒன்று அடித்தார்.
ஆனால் அவரை பற்றி நமக்கு என்ன தெரியும்? யமாலுக்கு வெறும் 16 வயதே ஆகிறது. ஜூலை 13-ம் தேதியோடு 17 ஆகப்போகிறது, அதாவது இறுதிசுற்றுக்கு ஒருநாள் முன்பு.
பார்சிலோனாவுக்காகவும் விளையாடுகிறார். ஏழு வயதிலேயே இவரை கிளப் அடையாள கண்டுவிட்டது. அப்போது ஸ்பெயினின் மிக பின்தங்கிய பகுதியான ரோகோஃபோண்டாவில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
பார்சிலோனா கிளப்புக்குள் மிக இளம் வயதில் நுழைந்தவரும், ஸ்பானிஷ் லீக்கிலேயே இளம் வயதில் கோல் அடித்தவரும் இவர்தான்.
2007-ல் மெஸ்ஸிக்கு 20 வயது இருந்தபோது ஒரு தொண்டுநிறுவன காலண்டருக்கான புகைப்படத்தில் மெஸ்ஸி கையில் குழந்தையாக இருந்தார் யமால். அதேபோல மெஸ்ஸி மற்றும் தனது தாயால் யமால் குளிப்பாட்டப்படும் புகைப்படமும் உள்ளது.
இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த யமாலின் தந்தை இரு ஜாம்பவான்களின் ஆரம்பகாலம் என குறிப்பிட்டுள்ளார்.
சரி, 17வது பிறந்தநாளுக்கான அவரது திட்டம் என்ன? ‘வெற்றிதான்’ என்கிறார் யமால்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



