You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம்: தந்தை, கணவர், மகன்களை இழந்த பெண்களின் நிலை என்ன? பிபிசி கள ஆய்வு
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது அங்குள்ள பெண்களின் வாழ்க்கைகையை புரட்டிப் போடப்பட்டுள்ளது. தந்தைகளை, கணவர்களை, மகன்களை இழந்து வாடும் பெண்களை நேரில் சந்தித்தது பிபிசி தமிழ்.
"தந்தையாகப் போவது தெரியாமலே இறந்துவிட்டாரே"
கும்பகோணத்தை சேர்ந்த, பெற்றோரை இழந்த 36 வயது ராதா, 33 வயது மணிகண்டனை திருமணம் (இரண்டாவது திருமணம்) செய்து கொண்டு கருணாபுரம் வந்தார். அவருக்கு பத்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சொந்த ஊரில் உறவுகள் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லாத நிலையில், மணிகண்டனின் வருமானத்தை நம்பி வாடகை வீட்டில் கருணாபுரத்தில் வசித்து வந்துள்ளார் ராதா.
இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு, சிறு சண்டை காரணமாக கணவருடன் பேசாமல் இருந்துள்ளார். அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றறிந்த உடன் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளார். அங்கு சென்ற போது, தான் இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது ராதாவுக்கு. அதை அவரிடம் தெரிவிக்கும் முன்பே இறந்துவிட்டார் என்று அழுது புலம்புகிறார் ராதா.
“அவர் பஜாரில் மூட்டை தூக்குபவர். எவ்வளவு மூட்டை தூக்குகிறாரோ அவ்வளவு காசு கிடைக்கும். அவர் வருமானம் மட்டுமே போதாது என்று நான் மூன்று வீடுகளுக்கு சென்று பாத்திரம் கழுவினேன். எல்லாவற்றுக்கும் அவரையே நம்பி இருந்துவிட்டேன். எங்கு சென்றாலும் அவர் உடன் வர வேண்டும் என்று வற்புறுத்துவேன்.
நான் இல்லாமல் போனால் என்ன செய்வாய் என்று என் கணவர் விளையாட்டாகக் கேட்பார். இன்று நிஜமாகிவிட்டது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டுக்கு வாடகை எப்படி கொடுப்பது, பிள்ளைகளை எப்படி படிக்க வைப்பது எஎன தெரியவில்லை” என்கிறார்.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)