You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தரபிரதேச விவசாயிகள் மோதி ஆட்சி பற்றி என்ன நினைக்கிறார்கள்? - காணொளி
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சுஷில் பாலின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் தங்களின் கடின உழைப்பிற்கு எந்த பலனும் இல்லை என்பதே அவர்களின் கவலை
நடந்து முடிந்த தேர்தலில் சுஷில் பால் பிரதமர் மோதிக்கு வாக்களிக்கவில்லை. ஆனால் இதற்கு முன்பு இருமுறை அவர் மோதிக்கே வாக்களித்திருந்தார்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் பிரதமர் மோதியின் வாக்குறுதி வெறும் வாக்குறுதியாகவே இருந்துவிட்டதாக அவர் கூறுகிறார்.
ஒரு கட்டத்தில் பா.ஜ.க-வின் வலுவான கோட்டையாக திகழ்ந்த இந்தப் பகுதியில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இம்மாதிரியான கிராமங்களை வளமையாக்குவதும், வளர்ச்சியின் பாதையில் அனைவரையும் உள்ளடக்குவதும், மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோதிக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.
உள்ளூரில் வேலை வாய்ப்பை உருவாக்கும் அளவில் உற்பத்தியை அதிகரித்து அதை வாங்குவதற்கான திறனையும் மக்கள் மத்தியில் உருவாக்குவதே இதற்கு தீர்வாக இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உலக அளவில் சக்திவாய்ந்த நாடாக மாறும் இலக்கை கொண்ட ஒரு நாட்டிற்கு கிராமங்களில் வசிக்கும் மக்களின் வளர்ச்சி என்பது முக்கியமான ஒன்று.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)