இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் குறித்து கவலை தெரிவித்த துருக்கி அதிபர்

காணொளிக் குறிப்பு,
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் குறித்து கவலை தெரிவித்த துருக்கி அதிபர்

பாகிஸ்தான், இந்தியா இடையிலான பதற்றம், பல பொதுமக்கள் கொல்லப்பட்டதால் ஒரு தீவிர மோதலாக மாறக்கூடும் என நாங்கள் கவலைப்படுகிறோம் என்று துருக்கி அதிபர் ரசீப் தய்யீப் எர்துவான் கூறியுள்ளார்.

"தாக்குதலில் உயிரிழந்த சகோதரர்களுக்கு கடவுளின் கருணை கிடைக்க வேண்டுகிறேன். மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் மக்களுக்கும், அரசுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெர்வித்துக் கொள்கிறேன்.

நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃபுடன் முக்கிய தொலைபேசி உரையாடல் நடந்தது. ஜம்மு காஷ்மீரில் நடந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தானின் சர்வதேச விசாரணை முன்மொழிவுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம்.

இந்தச் சூழ்நிலையை சிலர் மோசமாக்கினாலும், நிலைமை மேலும் மோசமடைவதற்குள் பதற்றத்தைக் குறைக்க பேச்சுவார்த்தைக்கான வாயில்களைத் திறக்கவும் நாங்கள் முயன்று வருகிறோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு