You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீர், ஜூஸ் போன்ற திரவங்களை மட்டுமே உணவாக சாப்பிட்டால் என்ன ஆகும்?
இன்றைக்கு பலரும் Liquid only diet டயட்டை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் கன்னியாகுமரியில் உயிரிழந்த 17 வயதான சக்தீஸ்வரன் என்பவரது மரணத்திலும் இத்தகைய Liquid only diet குறித்து பேசப்படுகிறது.
அவரின் இறப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சக்தீஸ்வரன் கடந்த சில மாதங்களாக இணையத்தில் அறிமுகமான சில திரவ உணவுமுறையை பின்பற்றி வந்ததாக கூறுகின்றனர்.
உடல் எடையை குறைக்க திரவ உணவுமுறை சரியானதா? உணவு கட்டுப்பாட்டை பின்பற்றும் போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்? இந்த காணொளியில் விளக்கமாக பார்க்கலாம்.
உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றுபவர்கள் முறையான ஆலோசனை பெற்று பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இளைஞர்களிடையே டயட் பற்றிய தவறான புரிதல் இருப்பதாகக் கூறுகிறார் மூத்த உணவியல் நிபுணரான ரேஷ்மா அலீம்.
"டயட் என்பது உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதோ அல்லது குறைவாக உணவுகளை எடுப்பதோ அல்ல, சரியான அளவில் உணவுகளை எடுத்து கொள்வது" என்கிறார் ரேஷ்மா.
அதே நேரம் உடற்பயிற்சி செய்பவர்கள், மருத்துவ பிரச்னை உள்ளவர்கள் உணவுமுறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.