நூறு வயதில் பெற்றோரான ஆமை ஜோடி - நெகிழ்ச்சி சம்பவம்

நூறு வயதில் பெற்றோரான ஆமை ஜோடி - நெகிழ்ச்சி சம்பவம்

ஃபிலடெல்பியாவில் அமைந்துள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் நூறு வயதைத் தொட்ட ஆமைகள் முதன்முறையாக பெற்றோர்கள் ஆகியுள்ளனர். இவை வெஸ்டர்ன் சாண்டா க்ரூஸ் கலபாகோஸ் ஆமை இனத்தைச் சேர்ந்தவை.

அப்ரஸோ மற்றும் மாம்மி என்று அழைக்கப்படும் அந்த ஆமை ஜோடிகள் நூறு வயதைக் கடந்து தற்போது நான்கு முட்டைகளைப் போட்டுள்ளன. நான்கு முட்டைகளில் முதல் முட்டையை பிப்ரவரி 27 அன்று போட்டுள்ளது மாம்மி. தற்போது அந்த முட்டையில் இருந்து முதல் ஆமைக்குஞ்சு வெளியேறியுள்ளதால் அங்குள்ள பணியாட்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு