காணொளி: கேரளாவில் பள்ளிக்கு செல்லப்பிராணி யானையை அழைத்து வந்த மாணவர்

காணொளி: கேரளாவில் பள்ளிக்கு செல்லப்பிராணி யானையை அழைத்து வந்த மாணவர்

கொச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் செல்லப்பிராணிகளுக்கான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது வீட்டில் வளர்க்கப்படும் யானையை அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்தப் பள்ளிக்கும், யானையின் உரிமையாளருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக எர்ணாகுளம் மாவட்ட வன அலுவலர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கேரளாவில் தனி நபர்கள் யானை வளர்ப்பது பல ஆண்டுக் காலமாக நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு