காணொளி: உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு
சீனாவின் குயிஜோ மாகாணத்தில் கட்டப்பட்ட ஹுவாஜியாங் கிராண்ட் கன்யன் பாலம் உலகிலேயே மிக உயரமான போக்குவரத்து பாலமாக திறக்கப்பட்டுள்ளது.
2,890 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம் கீழே உள்ள நதியிலிருந்து 625 மீட்டர் (சுமார் 2000 அடி) உயரத்தில் உள்ளது. இவ்வளவு உயரத்தில் பாலத்தை நிலைத்திருக்கச் செய்ய, 'ஸ்மார்ட் கேபிள்ஸ்' எனப்படும் சிறப்பு கேபிள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கேபிள்களில் சென்சார்கள் உள்ளன, அவை நேரத்திற்கு கேபிள்களில் ஏற்படும் உராய்வு, வெப்பநிலை, ஈரப்பதம் போன்ற தகவல்களை டேட்டா சென்டருக்கு அனுப்பும்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதற்கு முன், சீனா இந்தப் பாலத்தை ஐந்து நாட்கள் பல்வேறு முறைகளில் சோதனை செய்தது. இதில் லோட் டெஸ்டிங் (ஓட்டம் சோதனை) செய்ய, ஒரே நேரத்தில் 96 டிரக்குகள், சுமார் 3,000 டன் எடையை பாலத்தில் வைத்து சோதனை செய்யப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



