காணொளி: காஸாவில் பட்டினி குறித்து ஐ.நாவில் நெதன்யாகு கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, காஸா பற்றி நெதன்யாகு ஐநாவில் என்ன பேசினார்?
காணொளி: காஸாவில் பட்டினி குறித்து ஐ.நாவில் நெதன்யாகு கூறியது என்ன?

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80வது ஐநா பொதுச்சபை கூட்டம் நடந்தது. அதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசினார்.

அவர், "காஸா மக்களை இஸ்ரேல் வேண்டுமென்றே பட்டினி போடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. காஸா மக்களுக்கு இஸ்ரேல் உணவை வழங்குகிறது. ஆனால் அப்போதும் அவர்களுக்கு போதுமான உணவு இல்லையென்றால், அதற்கு ஹமாஸ் உணவை திருடுவதுதான் காரணம். ஹமாஸ் திருடுகிறது. பதுக்குகிறது. போருக்கு பணம் ஈட்ட உணவை அதிக விலைக்கு விற்கிறது." என்றார்.

மேலும், "பாலத்தீனத்தை தனி நாடாக சமீபத்தில் அறிவித்த தலைவர்கள் பாலத்தீனர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளனர். அது ஒரு தெளிவான செய்தி. யூதர்களை கொலை செய்வது பலனளிக்கும் என்பதுதான் அது." எனக் கூறினார்.

மேலும், "இந்த தலைவர்களுக்கு நான் ஒரு செய்தி வைத்துள்ளேன். உலகில் உள்ள கொடூரமான பயங்கரவாதிகள் உங்களது முடிவை பாராட்டுகிறார்கள் என்றால் நீங்கள் செய்தது தவறு. மிகப்பெரிய தவறு. உங்களுடைய அவமானகரமான முடிவு யூதர்கள் மற்றும் அப்பாவி மக்களுக்கு எதிரான பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும்." என்றார்.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு