மகாராஷ்டிரா: மத்தளம் அடித்து விநாயகர் ஊர்வலத்தை நடத்திய LGBTQIA+ சமூகத்தினர் - காணொளி
மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுவது அங்கே நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் தான். டோல் எனப்படும் மத்தளம் அடிக்கும் நிகழ்வு அங்கே மிகவும் பிரபலம்.
தானேவில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, டோல் தாஷா எனப்படும் மத்தள இசைக்கலைஞர்கள் சிறப்பான இசை விருந்தை மக்களுக்கு வழங்கினார்கள். ஆனால் அங்கு அனைத்து மக்களாலும் கவனிக்கப்பட்டது ஷிகந்தி டோல் தாஷா என்ற குழுவினரைத் தான்.
இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் LGBTQIA+ சமூகத்தினர். மகாபாரத்தில் வரும் திருநம்பி மகாராஜரான ஷிகந்தி அவரின் பெயரில் இந்த குழு செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதல்முறையாக LGBTQIA+ சமூகத்தினரால் உருவாக்கப்பட்ட டோல் இசைக்கலைஞர்கள் குழு என்று இதனை குறிப்பிடுகின்றனர்.
பிபிசியிடம் பேசிய இசைக்கலைஞர்கள், "ஆரம்ப காலம் முதலே பெரிய சவால்களை சந்திக்க நேரிட்டது. பயிற்சி பெற இடம் கிடைக்கவில்லை. பொதுவெளியில் பயிற்சி செய்தால் பொதுமக்கள் அதற்கு அனுமதி வழங்குவார்களா அல்லது ஏளனமாக பேசுவார்களா என்ற அச்சம் இருந்தது," என்று தெரிவித்தனர்.
இருப்பினும் இந்த சமூகத்தில் நாங்களும் ஒரு அங்கத்தினர் என்பதை அனைவருக்கும் புரிய வைக்கும் வகையில் இந்த இசை நிகழ்ச்சியை நாங்கள் நடத்தினோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஒளிப்பதிவு - நிதின் நகர்கர்
எடிட் - ஷாரத் பதே
தயாரிப்பு - ஜானவி மூலே
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



