காணொளி: இந்தியாவை சீண்டிய சுவிட்சர்லாந்து - ஐநாவில் நடந்தது என்ன?
சிறுபான்மையினர் மற்றும் கருத்து சுதந்திர விவகாரத்தில் இந்தியா குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் சுவிட்சர்லாந்து தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. சுவிட்சர்லாந்தில் இனவெறி, பாகுபாடு மற்றும் வெளிநாட்டினருக்கு எதிரான வெறுப்பு நிலவுவதாக கூறிய இந்தியா, முதலில் உங்கள் சொந்த நாட்டில் நிலவும் பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள் என தெரிவித்துள்ளது. என்ன நடந்தது?
செவ்வாய்க்கிழமை ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பல நாடுகள் தங்கள் கருத்துகளை முன்வைத்தன. சுவிட்சர்லாந்து தரப்பில் பேசிய அந்நாட்டு பிரதிநிதி மைக்கேல் மேயர் (michael meier), இந்தியாவில் சிறுபான்மையினரின் பாதுகாப்பையும், கருத்துச் சுதந்திரத்தையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்வதாக கூறினார்.
முழு விவரம் காணொளியில்..
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



