கடலில் இறங்கிய விண்கலத்தை சுற்றி துள்ளிக் குதித்த டால்பின்கள் - என்ன நடந்தது? புகைப்படத் தொகுப்பு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பியுள்ளார். இந்திய நேரப்படி, இன்று (19/03/2025) அதிகாலை சுமார் 3.30 மணிக்கு அவர் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி, மிதந்தது.

புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இணைந்து அவர் பூமிக்கு திரும்பினார்.

நால்வரும் பயணித்த டிராகன் கலம் படிப்படியாக வேகத்தை குறைத்து பெருங்கடலில் விழுந்ததும், அதனைச் டால்பின்கள் சூழ்ந்தன. விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி பல டால்பின்கள் மேற்புறத்தில் நீந்திக் கொண்டிருந்தது நாசாவின் கேமராக்கள் காட்டின. அது மீட்புக் குழுவுக்குக் கிடைத்த பெருமை என்று நாசா விஞ்ஞானிகள் நகைச்சுவையாகக் கூறினர்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களிடம் விடை பெற்றது முதல் 17 மணி நேர பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு வந்தடைந்தது வரையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணங்களை இந்த புகைப்படங்களாக பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு