புலி, மயில் போலத் துல்லியமாக ஒலி எழுப்பும் பறவை மனிதர் - யார் இவர்?
தடோபா அந்தாரி தேசியப் பூங்காவின் புலிகள் பாதுகாப்பு திட்டத்த்தில் பங்கு வகிக்கிறார் சுமேத் வாக்மாரே. இவர் பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளைப் போன்று துல்லியமாக ஒலி எழுப்புகிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தடோபாவின் 'பறவை மனிதர்` எனப் பிரபலமாக அறியப்படுகிறார் சுமேத் வாக்மாரே. இவர் ஹிங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் தடோபா தேசிய பூங்காவில் இயற்கை ஆர்வலராகப் பணிபுரிகிறார்.
ஒலிகளில் பல மாறுபாடுகளை உருவாக்க சுமேத் அமைதியான இடத்தில் அதற்காகப் பயிற்சி எடுக்கிறார். ஏரிக் கரைகளில் பல மணிநேரம் அமர்ந்து பல்வேறு பறவைகளின் ஒலிகளை அவர் கேட்கிறார். பின்னர், அந்த ஒலியை அப்படியே எழுப்ப முயல்கிறார்.
தடோபாவில் பல நிகழ்ச்சிகளையும் அவர் நடத்தி வருகிறார். சூழல் வழிகாட்டியாக இருக்கும் அவர், தன்னுடைய நிகழ்ச்சிகள் வாயிலாக சுற்றுலாப் பயணிகளுக்குப் பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்தும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தடோபாவில் அதற்கென அரங்கம் ஒன்றையும் வனத்துறை அவருக்கு அளித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



