You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உங்கள் மலம் நீரில் மிதக்கிறதா? அது சொல்லும் ரகசியம் என்ன?
உங்களது கழிவறையில் உங்கள் கழிவு மிதக்கிறதா அல்லது நீரில் மூழ்கிறதா?
இப்படி ஒரு கேள்வி உங்களிடம் கேட்டதும் அது உங்களுக்கு சற்று நெருடல் தருவது போல இருக்கலாம். ஆனால் இது முக்கியமானது.
சில நேரங்களில் நாம் கழிக்கும் மலம் கழிவறை நீரில் மூழ்காமல் நீரின் மேற்பரப்பிலேயே மிதக்கும். அப்படி நடந்தால், அது உங்கள் செரிமான அமைப்பில் ஏதேனும் பிரச்னை இருப்பதைக் குறிப்பதாகும் என்ற அறிவியல் உண்மை சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.சில நேரங்களில் மலம் ஏன் மிதக்கிறது? இது ஒரு புதிர்.
நம்மில் பெரும்பாலோர் இதை எதிர்கொண்டிருக்கலாம். சில நேரங்களில் மனிதக் கழிவு கழிவறையில் முழுதாக ஃபிளஷ் ஆகாமல் நீரின் மேற்பரப்பில் மிதக்கும். ஆனால், மற்ற நேரங்களில் முழுதாக ஃபிளஷ் ஆகிவிடும்.
இது ஒரு வகையான மர்மம்தான்.
இந்தப் புதிருக்கான பதில்தான் நம் உடலுக்குள் என்ன நடக்கிறது, அங்கு வாழும் நுண்ணுயிரிகளின் ஆரோக்கியம் ஆகியவை பற்றிய சில ஆச்சரியமான தகவல்களை வழங்குகிறது.எப்போதாவது கழிவு மிதப்பதற்கு, அதிலிருக்கும் கொழுப்பு அளவுகள் காரணம் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டது.
ஆனால் 1970களின் முற்பகுதியில் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் இரண்டு இரைப்பைக் குடலியல் நிபுணர்கள் அதிக நேரம் செலவிட்டு, தொடர்ச்சியான சோதனைகள் மூலம் இதைக் கண்டறிய முடிவு செய்தனர்.இந்தச் சோதனைகளில் 39 தன்னார்வலர்களின் மலத்தை மற்றும் நிபுணர்களின் சொந்தக் கழிவுகளில் சிலவற்றையும் பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்திய பிறகு, அவர்கள் சொன்ன பதில், அது கொழுப்பு அல்ல, வாயு என்பதுதான்.
இன்னும் துல்லியமாகச் சொன்னால், மலத்தில் காணப்படும் வாயுவின் அளவுகளைப் பொறுத்து, கழிவு மேற்பரப்பில் மிதக்கும் அல்லது சில நேரங்களில் மூழ்கவும் கூடும். மிதக்கும் கழிவுகளில் உள்ள வாயுவை வெளியேற்றினால், அவை மூழ்கிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த வித்தியாசத்திற்கான காரணம், அதிகப்படியான மீத்தேன் உற்பத்தி தான் என்று அவர்கள் முடிவு செய்தனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அதிகப்படியான வாய்வு.
மினசோட்டாவின் ரோசெஸ்டரில் உள்ள மயோ கிளினிக்கின் ஸ்டெம் செல் மற்றும் புற்றுநோய் உயிரியல் ஆய்வகத்தின் இயக்குநர் கண்ணன் இங்கு தான் விறுவிறுப்பான ஒரு தலைப்பிற்குள் நுழைகிறார். இடைப்பட்ட ஆண்டுகளில், உடல் பருமன் முதல் இதய நோய் வரை, நமது ஆரோக்கியத்தின் பல அம்சங்களில் நமது மைக்ரோபயோட்டா வகிக்கும் மகத்தான பங்கை மருத்துவ அறிவியல் வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் தெரிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்.
கிராஃபிக்ஸ் & படத்தொகுப்பு: பி டேனியல்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)