மோதி அரசின் ஒன்பது ஆண்டுகள்: சாதனைகளை பட்டியலிடும் பாஜக, தோல்விகள் என சுட்டிக்காட்டும் காங்கிரஸ்!

மோதி அரசின் ஒன்பது ஆண்டுகள்

பட மூலாதாரம், Reuters

பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று விரைவில் ஒன்பது ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதையொட்டி மத்திய அரசின் சாதனைகளை பாஜக பெருமையுடன் பேசி வர, எதிர்க்கட்சிகள் அதை விமர்சித்துள்ளன.

கடந்த 2014 இல் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றது. இதை முன்னிட்டு, மத்திய அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனைகள் பட்டியலை சமூக ஊடகங்களில் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தது பாஜக.

பாஜகவின் இந்த பதிவை மெளனமாக கடந்து போகாத காங்கிரஸ், பாஜகவிடம் ஒன்பது கேள்விகளை முன்வைத்துள்ளது. மத்திய பாஜக அரசு மீதான தங்களது கேள்விகளை சமூக ஊடகங்களில் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 28 நகரங்களில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலும் காங்கிரஸ் எழுப்பி உள்ளது.

'நாட்டு மக்களின் குரலாக இதுபோன்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படும் என்றும், மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி கொண்டே இருப்போம்' எனவும் காங்கிரஸ் சனிக்கிழமை வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

'மோதி தலைமையிலான பாஜக அரசு கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. இந்த காலகட்டத்தில் மத்திய அரசின் ஒன்பது தோல்விகள் குறித்து, 28 நகரங்களில் நடத்தப்பட்டுள்ள செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்துள்ளோம்.

மக்களின் குரலாக காங்கிரஸ் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். அரசியலமைப்புச் சட்டத்தை காக்கும் நோக்கிலான போராட்டம் தொடரும். மத்திய பாஜக அரசின் தவறுகள் தொடர்ந்து சுட்டிக்காட்டப்படும்' என்று அந்த பதிவில் காங்கிரஸ் குறிப்பிட்டிருந்தது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

காங்கிரசின் ஒன்பது கேள்விகள்

  • நாட்டின் பணவீக்கமும், வேலை வாய்ப்பின்மையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே போவது ஏன்? நாட்டில் பணக்காரர்கள் மேலும் செல்வந்தர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் போய் கொண்டிருப்பது ஏன்?
  • விவசாயம் தொடர்பான சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டபோது, விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஏன் நிறைவேற்றப்படவில்லை? விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஏன் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்படவில்லை?
  • நாட்டு மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து, எல்ஐசி மற்றும் எஸ்பிஐயில் முதலீடு செய்துள்ள பணத்தை, உங்கள் நண்பர் அதானிக்கு பயனளிக்கும் வகையில் பணயம் வைத்தது ஏன்? ஊழல், முறைகேட்டில் ஈடுபட்ட சில நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டது எதனால்?
  • பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து மத்திய பாஜக அரசு மௌனம் சாதிப்பது ஏன்?
  • சீனாவுக்கு நீங்கள் 2020 இல் நற்சான்று அளித்துவிட்டாலும், இன்னமும் அந்த நாடு இந்திய எல்லையை ஆக்கிரமித்து கொண்டிருப்பது ஏன்?
  • தேர்தல் ஆதாயங்களுக்காக வெறுப்பு அரசியலை வேண்டுமென்றே பரப்புவது ஏன்?
  • நமது அரசியலமைப்பின் விழுமியங்களையும், ஜனநாயக அமைப்புகளையும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஏன் பலவீனப்படுத்தினீர்கள்? எதிர்க்கட்சிகளின் மீது ஏன் பழிவாங்கும் அரசியலை செய்கிறீர்கள்?
  • ஏழைகள் மற்றும் பழங்குடியின மக்களின் நலத் திட்டங்களுக்கான நிதியை குறைப்பதன் மூலம் இந்தத் திட்டங்களை ஏன் நலிவடைய செய்கிறீர்கள்?
  • கொரோனாவால் நாட்டில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தபோதும், அவர்களின் குடும்பங்களுக்கு இந்த அரசு ஏன் இழப்பீடு வழங்கவில்லை? பொதுமுடக்கம் திடீரென அமல்படுத்தப்பட்டது ஏன்?
X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

ஒன்பது வாக்குறுதிகள்

இந்த ஒன்பது கேள்விகளை மட்டும் மத்திய பாஜக அரசை நோக்கி காங்கிரஸ் எழுப்பவில்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு ஒன்பது வாக்குறுதிகளை பாஜக அளித்தது. ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வருவது, ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி புதிய வேலைவாய்ப்புகள், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய், 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவது, புல்லட் ரயில் திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம், நாட்டின் பொருளாதாரத்தை ஐந்து ட்ரில்லியனாக உயர்த்துவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவது" என்ற ஒன்பது வாக்குறுதிகளையும் மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

பாஜக கூறியது என்ன?

புதிய நாடாளுமன்ற கட்டடம் ஞாயிற்றுக்கிழமை (மே 28) திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு இருந்தே மத்திய பாஜக அரசை காங்கிரஸ் கடுமையாக சாடி வருகிறது.

காங்கிரசின் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி தரும் விதத்தில், ‘ஒன்பது ஆண்டுகள்; ஒன்பது சாதனைகள்’ என்ற தலைப்பில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டுள்ளது பாஜக. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசின் சாதனைகளை, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசுடன் ஒப்பிட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய அதே நாளில், பாஜக மூத்த தலைவரான ரவி சங்கர் பிரசாத்தும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மக்களவைத் தேர்தலில் கடந்த இரண்டு முறை காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதேபோன்றதொரு மோசமான தோல்வியை எதிர்வரும் தேர்தலிலும் (2024) அக்கட்சி சந்திக்கும்" என்றார் ரவி சங்கர் பிரசாத்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

பாஜக பட்டியலிடும் சாதனைகள்

  • காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது நாட்டின் பணவீக்க விகிதம் 8.7 சதவீதமாக இருந்தது. இதுவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 4.8 சதவீதமாக குறைந்துள்ளது.
  • காங்கிரஸ் ஆட்சியின்போது நிலக்கரி சுரங்கங்களின் உரிமம் அக்கட்சியின் நண்பர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் மத்திய பாஜக அரசு இதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்தது.
  • காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, அரிசிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக 3.09 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதுவே பாஜக தலைமையிலான மத்திய ஆட்சியில் 10.64 லட்சம் கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது.
  • எல்ஐசியின் வருமானம் ஒரு வருடத்தில் 27 மடங்கு அதிகரித்துள்ளது. எஸ்பிஐ வங்கியும் ஒரு காலாண்டில் அதிகப்படியான லாபத்தை ஈட்டி உள்ளது.
  • நேருவின் ஆட்சிக் காலத்திலும், காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியின்போது தான் சீனா, இந்திய மண்ணை ஆக்கிரமித்தது. ஆனால் பாஜக தலைமையிலான NDA அரசு சீனாவிடம் மண்டியிடவில்லை.
  • காங்கிரஸ் மற்றும் வெறுப்பு அரசியல் இரண்டும் ஒரே அர்த்தம் தரும் வார்த்தைகள் தான். இதன் காரணமாகவே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காங்கிரஸ் அழிந்துவிட்டது.
  • ஓபிசி ஆணையத்தின் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை காங்கிரஸ் எதிர்த்தது. முத்தலாக் தடையையும் எதிர்த்தது. நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரையும் காங்கிரஸ் அவமதித்தது.
  • பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாஜக ஆட்சியில், அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களை நேரடியாக சென்றடைகின்றன.
  • கொரோனாவை கையாண்ட விதத்துக்காக, மத்திய அரசை உலகமே பாராட்டிக் கொண்டிருந்தபோது, கொரோனா குறித்து நாட்டில் அச்சத்தை பரப்பிக் கொண்டிருந்தது காங்கிரஸ் என்று பதிலடி கொடுத்துள்ளது பாஜக.
X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 4

பாஜகவை பார்த்து கேள்வி எழுப்பும் பிற எதிர்க்கட்சிகள்

பாஜக அரசு தினந்தோறும் ஏதாவது ஒன்றை மாற்றிக் கொண்டே இருக்கிறது என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி அண்மையில் விமர்சித்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, “ வரலாறு, மதம், கல்விக் கொள்கை, ருபாய் நோட்டு என ஒவ்வொன்றையும் மத்திய பாஜக அரசு மாற்றி வருகிறது. ஒரு நாள் பாஜகவே ஆட்சியில் இருந்து மாற்றப்படும்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

பலராலும் விரும்பப்படாத மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத கொள்கைகள் கடந்த ஒன்பது ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டன. ஆனால் அவை வெற்றிப் பெறவில்லை என்றும் மம்தா கூறினார்.

அதேநேரம், ‘கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் மோதி, நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் எந்த கேள்விகளுக்கும் அங்கு பதிலளிக்கவில்லை’ என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரான டெரிக் ஓ பிரைன் சாடியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 5

கடந்த ஒன்பது ஆண்டுகளில் மோதி தலைமையிலான மத்திய அரசு 99 க்கும் அதிகமான அநீதிகளை நாட்டுக்கு இழைத்துள்ளது என்ற தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின், பாரத் ராஷ்ட்ரிய சமிதி விமர்சித்துள்ளது.

இதுதொர்பாக, இந்த கட்சியைச் சேர்ந்த ஒய். சதீஷ் ரெட்டி, தமது ட்விட்டர் பதிவில், “ பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பொதுத் துறை நிறுவனங்களை விற்பது, வேலை வாய்ப்பின்மை, கொரோனாவை நிர்வாக திறமை இல்லாமல் கையாண்டது, ஜனநாயக படுகொலை, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போன்றவை பாஜக அரசு இழைத்த 99 அநீதிகளில் முக்கியமானவை.

X பதிவை கடந்து செல்ல, 6
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 6

இவற்றுடன் ஊடகங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது, புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையும் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தியது, சுய ஆதாயத்துக்காக நாட்டின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலையையும் மாற்றியது ஆகியவையும் மத்திய பாஜக அரசு இழைத்த துரோகங்கள்” என்று ஒய். சதீஷ் ரெட்டி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அதிஷி, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் அண்மையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். மத்திய அரசின் ஓர் அவசரச் சட்டம் தொடர்பான அந்த கட்டுரையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முற்றிலும் முரணாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட, அரசு இயந்திரத்தில் உயர் பொறுப்பு வகிக்கும் இரண்டு நபர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

X பதிவை கடந்து செல்ல, 7
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 7

“மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பது எனும் மோசமான செயலை கடந்த ஒன்பது ஆண்டுகளாக மோதி தலைமையிலான அரசு செய்து வருகிறது.

மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு பிற கட்சிகளின் எம்எல்ஏக்களை விலை வாங்கும் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ எனும் திட்டத்தை முதலில் அவர்கள் செயல்படுத்தினர் .

பின்னர் பிற கட்சிகளுக்கு எதிராக அமலாக்கத் துறையை பயன்படுத்துவது, அரசியலமைப்பிற்கு எதிரான சட்டங்களை கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசு இறங்கியது” என்று ஆம் ஆத்மியின் அதிஷி தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: