டைம்டு அவுட்: இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட்டில் என்ன சர்ச்சை? என்ன நடந்தது?
சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக புதுமையான முறையில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
உலகக்கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவர் டைம்டு அவுட் எனும் முறையில் விக்கெட் பறிகொடுத்தார். இதுகுறித்து கிரிக்கெட் உலகில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நான்காவது நடுவரும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழந்தது தொடர்பாக விளக்கம் அளித்துளளார்.
ஏஞ்சலோ மேத்யூசை தொடக்க போட்டிகளில் களமிறக்காததால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு ரசிகர்களே விமர்சித்து வந்த நிலையில் புதுமையான முறையில் அவர் அவுட்டாகியுள்ளார். இது இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)









