மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் AI தொழில்நுட்பம்- ஏன் தெரியுமா?

காணொளிக் குறிப்பு, மக்களை அச்சத்துக்கு உள்ளாகும் AI தொழில்நுட்பம்- ஏன் தெரியுமா?
மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் AI தொழில்நுட்பம்- ஏன் தெரியுமா?

தற்போது மக்களில் பலரும் AI தொழில்நுட்பத்தால் தங்களது வேலை பறிபோய்விடுமோ என்று அதிகம் கவலைப்பட தொடங்கிவிட்டனர்.

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் என்பது கணினியை மனிதர்களை போன்று சிந்திக்கவும் செயல்படவும் வைக்கும் தொழில்நுட்பம், அலெக்ஸா, சாட் ஜிபிடி போன்றவற்றில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது. இவைமட்டும் அல்லாமல் வேறு சில வழிகளிலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், இதற்காக மக்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?

ஏற்கனவே, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களை விட திறன் வாய்ந்ததாக திகழ்கிறது. எதிர்காலத்தில் என்னென்ன துறைகளுக்கு இது பயன்படுத்தப்படுமோ என்ற கவலை மனிதர்களிடம் எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான மென்பொருட்களை உருவாக்கும் மனிதர்களால் கூட, அவற்றால் என்னென்னவற்றை செய்ய முடியும் என்பதை கணிக்க முடியாது. நாட்கள் செல்லசெல்ல, உள்ளீடுகள் அதிகளவு கிடைக்கும்போது AI தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ளும். AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு விரிவடையும்போது, தங்கள் வேலைக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று மக்கள் அச்சம் கொள்கின்றனர். ( முழு தகவல் காணொளியில்)

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: