ஆப்கானிஸ்தானில் வெள்ளத்திற்கு நடுவே சிக்கிக் கொண்ட கார் - 11 பேர் உயிர் தப்பியது எப்படி?

காணொளிக் குறிப்பு, ஆப்கானிஸ்தானில் வெள்ளத்திற்கு நடுவே சிக்கிக் கொண்ட கார் - 11 பேர் உயிர் தப்பியது எப்படி?
ஆப்கானிஸ்தானில் வெள்ளத்திற்கு நடுவே சிக்கிக் கொண்ட கார் - 11 பேர் உயிர் தப்பியது எப்படி?

ஆப்கானிஸ்தானில் 11 பேர் கொண்ட குடும்பம் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. வெள்ளத்திற்கு நடுவே சிறிய காருக்குள் சிக்கிய இருந்த அவவர்கள் உதவி கிடைக்காமல் தவித்தனர். ஆனாலும், முடிவில் இவர்கள் உயிர் பிழைத்தனர். உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம் என இவர்கள் கூறுகின்றனர்.

உயிர் பிழைத்த பீபி கூறுகையில், "என்ன நடந்தது என்பது எனக்குப் புரியவில்லை. நான் சுய நினைவை இழந்துவிட்டேன். நான் பயந்துவிட்டேன். குழந்தைகளை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது என்று நினைத்தேன். நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம். நான் குரானை உச்சரித்து கொண்டிருந்தேன். எங்கள் ஒரே நம்பிக்கை கடவுள்தான்." என்றார்.

வெள்ள நீரில் அரை மணி நேரம் சிக்கியிருந்த கார் ஒரு மூலைக்கு தள்ளப்பட்டதால் அந்த குடும்பம் உயிர் பிழைத்தது.

வெள்ளத்திற்கு நடுவே சிறிய காருக்குள் சிக்கி உயிர் தப்பிய மக்ஃபருல்லாஹ் கூறுகையில், "குழந்தைகள் மீது சேறு படிந்திருந்தது. வெள்ளம் வந்த போது கிட்டத்தட்ட எங்களை 5 மீட்டருக்கு தள்ளிவிட்டது. மற்றொரு அலை எங்களை ஒரு துளைக்குள் தள்ளியது. என் முதுகு வளைந்துவிட்டது." என்றார்.

வடக்கு ஆப்கானிஸ்தானின் பாக்லானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 3,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துவிட்டன.

ஆப்கன் வெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)