தனித்தனியாக பிரிந்து வாழ திருமணம் செய்து கொள்ளும் ஜப்பான் மக்கள் - ஏன் இப்படி செய்கிறார்கள்?

தனித்தனியாக பிரிந்து வாழ திருமணம் செய்து கொள்ளும் ஜப்பான் மக்கள் - ஏன் இப்படி செய்கிறார்கள்?

ஜப்பானில் 'பிரிவு திருமணம்' அல்லது 'வார இறுதி திருமணம்' என்ற டிரெண்ட் பிரபலமாகி வருகிறது

இந்த திருமண பந்தத்தில் இருக்கும் தம்பதிகள், ஒன்றாக சேர்ந்து வாழாமல் தனியாகவே வசிக்கின்றனர்.

தனித்தனி வீடுகளில், தங்களுக்கு பிடித்த வேலை, பொழுதுபோக்கு ஆகியவற்றில் ஈடுபடும் இந்த ஜோடிகள் வாரத்தில் ஓரிரு முறை மட்டும் நேரில் சந்தித்து கொள்கின்றனர்.

இந்த திருமணமுறையில் ஒருவரின் வாழ்வில் மற்றொருவர் தலையிடுவதில்லை.

ஜப்பானில் வீட்டு வேலைகளை சரிசமாக ஆணும் பெண்ணும் பிரித்துக் கொள்வதில்லை என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு கூறுகிறது.

குழந்தைகளை பராமரிப்பது, வீட்டு வேலைகளை பார்ப்பதில் ஆண்களை விட ஜப்பான் நாட்டு பெண்கள் 5 மடங்கு அதிக நேரத்தை செலவிடுவதாக இந்த அமைப்பு கூறுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: