காணொளி: 'துரோகிகளால் தோற்றோம்' - ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் குறித்து இபிஎஸ்

காணொளிக் குறிப்பு, 'துரோகிகளால் தோற்றோம்' - ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் குறித்து இபிஎஸ்
காணொளி: 'துரோகிகளால் தோற்றோம்' - ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் குறித்து இபிஎஸ்

முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டனர்.

இந்நிலையில், மதுரை கப்பலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் சேர்ந்து வந்தது குறித்து கேள்வியெழுப்பினர்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி, "அதிமுகவில் அவர்கள் இருக்கும்போதே குழிபறித்ததால் தான் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இப்படிப்பட்ட துரோகிகள் அதிமுகவில் இருந்ததால் தான் 2021ல் எங்களால் ஆட்சிக்கு வர முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வரும் என ஓபிஎஸ் கூறினார். உண்மையான அதிமுகவினரால் எப்படி இப்படி கூற முடியும். மூவரும் திமுகவின் பி டீமாக இருந்து செயல்படுகின்றனர்.” என தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு