You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்வீடனில் குர்ஆனை எரித்த இராக்கியர் சுட்டுக் கொலை - வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு உள்ளதா?
- எழுதியவர், மையா டேவில் & டேனி எபெர்ஹார்ட்
- பதவி, பிபிசி நியூஸ்
ஸ்வீடனில் குர்ஆனை எரித்ததன் மூலம் கலவரங்களுக்கு வித்திட்ட ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஸ்டாக்ஹோமின் சோல்டெர்டாஜில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் புதன்கிழமை மாலை சல்வான் மோமிகா கொல்லப்பட்டதாக அரசு வழக்கறிஞர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
கடந்த 2023இல் ஸ்டாக்ஹோம் மத்திய மசூதிக்கு வெளியே இஸ்லாத்தின் புனித நூலான குர்ஆனின் பிரதிக்கு மோமிகா நெருப்பு வைத்ததைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது.
இந்நிலையில், சமீபத்தில் நாற்பது வயதான ஒரு நபர் இரவில் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஸ்டாக்ஹோம் காவல்துறையினர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
ஹோவ்ஸ்ஜோவில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக புதன்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11:11 மணிக்கு அதிகாரிகளுக்கு அழைப்பு வந்தது.
- எரிமலை வெடிப்பால் நகரமே அழிந்தபோது இந்த ஆண், பெண் கைகளில் பற்றி இருந்தது என்ன? 2,000 ஆண்டுக்கு முந்தைய அற்புத வாழ்க்கை
- 'புலியை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்க விருப்பமா?' - நேபாளத்தில் வெற்றிக்கதையே ஆபத்தாக மாறியது எப்படி?
- பெண்ணை மகிழ்விக்க பரிசு மட்டுமின்றி, உயிரையே தரும் ஆண் - பூச்சி, பறவைகளில் என்ன நடக்கிறது?
- தொலைதூர தீவில் விடப்பட்ட 1,329 சிறிய ரக நத்தைகள் - ஏன்?
பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர், குண்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் வியாழக்கிழமை காலை உயிரிழந்ததாக காவல்துறையினர் அறிவித்தனர்.
மோமிகா சுட்டுக்கொல்லப்பட்ட நேரத்தில் அவர் சமூக ஊடகத்தில் நேரலை செய்துகொண்டிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்வீடனில் வசித்து வந்த இராக்கை சேர்ந்தவரான மோமிகா உள்ளிட்ட இருவர் மீது 2023 கோடையில் நான்கு சந்தர்ப்பங்களில் "ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு எதிராகப் போராடியதாக", கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், "குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இறந்துவிட்டது" உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால், அந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக ஸ்டாக்ஹோம் மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு உள்ளதா?
"இதில் வெளிநாட்டு சக்திகளுக்குத் தொடர்பு இருக்கும் அபாயம் உள்ளதால்" ஸ்வீடனின் பாதுகாப்பு அமைப்புகள் இந்த விசாரணையில் தலையிட்டிருப்பதாக அந்நாட்டு பிரதமர் உல்ஃப் கிரிஸ்டர்ஸன் கூறியதாக எஸ்விடி தெரிவித்துள்ளது.
மோமிகா இஸ்லாத்துக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தியது, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள பல நாடுகளில் சீற்றத்தை ஏற்படுத்தியது.
பாக்தாத்தில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தில் இரண்டு முறை கலவரம் ஏற்பட்டதுடன், தூதரக ரீதியான சர்ச்சையால் ஸ்வீடன் தூதர் அந்த நகரை விட்டு வெளியேற்றப்பட்டார்.
நாட்டின் கருத்து சுதந்திர சட்டங்களின் அடிப்படையில், மோமிகா புனித நூலை எரித்த போராட்டத்திற்கு ஸ்வீடன் காவல்துறையினர் அனுமதியளித்து இருந்தனர்.
அதற்குப் பிறகு, சில சுழ்நிலைகளில் புனித நூல்களை எரிக்கும் போராடங்களுக்குத் தடை விதிக்க சட்டரீதியான வழிமுறைகளை ஆய்வு செய்வதாக அரசு உறுதியளித்திருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)