காணொளி: இந்த மாடி வீடு 250 அடி பின்னோக்கி நகர்த்தப்படுவது ஏன்?
பஞ்சாபின் பர்னாலா மாவட்டம் சந்து கலன் கிராமத்தில் உள்ள இந்த வீடு, பாரத் மாலா திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைக்கென முன்மொழியப்பட் இடத்தில் அமைந்துள்ளது. இந்த வீட்டை இடிக்காமல் அதை முழுதாக அப்படியே வேறு இடத்திற்கு மாற்ற அதன் உரிமையாளர் முயல்கிறார்.
"இது பாரத் மாலா திட்டத்தின் பாதையில் வருகிறது. இது தேசிய நெடுஞ்சாலை 754இன் ஒரு பகுதி. இந்த வீட்டை 2017இல் ஆசைஆசையாக கட்டினோம். அது இடிக்கப்படுவதைப் பார்த்துவிட்டு புதிதாக ஒன்றைக் கட்டுவது கடினமாக இருக்கும். இதில் தளங்கள் மற்றும் கழிவுநீர் கட்டமைப்பை மீண்டும் அமைக்க வேண்டியிருக்கும்" என்று வீட்டு உரிமையாளர் சுக்ப்ரீத் சிங் கூறுகிறார்.
நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 250 அடி பின்னோக்கி வீடு நகர்த்தப்படுகிறது. இந்த வேலையை லூதியானாவை சேர்ந்த ஒப்பந்ததாரர் குர்மெயில் சிங் தனது குழுவுடன் செய்து வருகிறார். இந்த வீடு ஒவ்வொரு நாளும் ஐந்து முதல் ஆறு அடி வரை நகர்த்தப்படுகிறது.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



