காணொளி : 625 மீட்டர் உயரத்தில் உலகின் உயரமான பாலம்
காணொளி : 625 மீட்டர் உயரத்தில் உலகின் உயரமான பாலம்
உலகின் மிக உயரமான பாலமாகவுள்ள ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலத்தின் மீது சுமை சோதனை செய்து முடிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் கட்டமைப்பு வலிமை மற்றும் செயல்திறன் பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்வதாக சோதனை குழு தெரிவித்துள்ளது.
மொத்தம் 3,000 டன்களுக்கும் அதிகமான எடையுள்ள 96 டிரக்குகள் பாலத்தின் மீது ஓட்டப்பட்டன. இந்த பாலம் 2,890 மீட்டர் நீளமும், ஆற்றிலிருந்து 625 மீட்டர் உயரத்திலும் உள்ளது.
பாலம் கட்டி முடிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் திறக்கப்படும் போது, உலகின் மிக உயரமான பாலமாக இருக்கும்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



