எத்தனை வகையான செஸ் போட்டிகள் விளையாடப்படுகின்றன தெரியுமா? (காணொளி)
செஸ் போட்டியில் உலகளவில் தமிழர்கள் முன்னிலை வகிப்பது தெரிந்த விஷயம்; ஆனால் செஸ்ஸில் என்னென்ன முக்கியமான வகை போட்டிகள் இருக்கிறது என்று தெரியமா?
சர்வதேச செஸ் கூட்டமைப்பு, FIDE தான் உலகளாவிய செஸ் விளையாட்டின் விதிகள், தரவரிசை உள்ளிட்டவற்றை தீர்மானிக்கின்றது. அதன்படி, செஸ் விளையாட்டின் சாம்பியன்ஷிப் போட்டிகள், மூன்று முக்கியமான வகையில் நடத்தப்படுகிறது. அவை Classical, Rapid மற்றும் Blitz.
இவை எல்லாவற்றிலும் நேரம் முக்கியமான அங்கம் வகிக்கும். கிலாஸிக்கல் வகையில் பொதுவாக முதல் 40 காய் நகர்த்தலுக்கு இருவருக்கும் தலா சுமார் 90 நிமிடங்கள் வழங்கப்படும், ஆனால், சில நேரங்களில் போட்டிகள் குறிப்பிட்ட விதிகள் அடிப்படையில், சில மணி நேரம் வரை கூட நீடிக்கும். இதுதான் வழக்கமாக பலரும் விளையாடும் செஸ் போட்டி வகை ஆகும்.
ஆனால் இதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது ராபிட் வகை போட்டிகள். இவை 10 நிமிடங்களிலிருந்து 60 நிமிடங்களுக்குள் வரையிலான போட்டிகள். உதாரணமாக 20 நிமிட போட்டி எனில், இருவருக்கும் தலா 20 நிமிடங்கள் வழங்கப்படும். இருவரும் வேகமாக காய்களை நகர்த்த வேண்டும்; ஒன்று ராஜாவை வீழ்த்த வேண்டும் அல்லது எதிராளியை விட அதிக நேரம் கையில் வைத்திருக்க வேண்டும்.
இந்த வகை போட்டியில் நேரம் முக்கியமானது. முதலில் யார் 20 நிமிடங்களையும் இழக்கிறாரோ அவர் Time out முறையில் தோற்றவராக அறிவிக்கப்படுவார்.
அடுத்ததாக பிலிட்ஸ் வகை போட்டி. இதிலும் ராபிட் வகை போலவே நேரம் தான் பிரதானம் ஆகும். இவை 3 முதல் 10 நிமிடங்கள் வரையிலான போட்டிகளாக இருக்கும். ஒரு போட்டியாளர் அதிவேகமாக காய்களை நகர்த்த வேண்டும், அதே சமயம் எதிராளியை வீழ்த்தும் நோக்கமும் கொண்டு இருக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



