249 ரன்களை குவித்தும் இந்தியா மேற்கிந்திய தீவுகளிடம் தோற்றது ஏன்? ஹோப் சதம், சேஸ் பந்துவீச்சு செய்த மாற்றம்

கடைசி கட்டத்தில் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், திலக் வர்மா இருவரும் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக அடித்தார்கள். இருவரும் ஒரேபோல் தலா 18 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடித்தார்கள்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கிறது.

முதலில் பேட்டிங் செய்து 249 என்ற மிகப் பெரிய ஸ்கோரை பதிவு செய்தும்கூட இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை.

ராஞ்சியில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் குவித்தது. அந்த இலக்கைத் துரத்திய மேற்கிந்திய தீவுகள் 4 விக்கெட்டுகளை இழந்து 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியது.

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது பெரிய சேஸ் இதுதான். இந்த ஆண்டு மட்டும் மூன்றாவது முறையாக 220+ ரன்கள் எடுத்தும் அதை டிஃபண்ட் செய்ய முடியாமல் தோற்றிருக்கிறது இந்திய அணி.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற உதவிய அவர்களின் கேப்டன் ஷாய் ஹோப் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

சாம்சன் கொடுத்த சிறந்த அடித்தளம்

இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் நல்ல தொடக்கம் கொடுத்தார்கள். 20 ரன்கள் எடுத்திருந்த அபிஷேக் ஷர்மா, நான்காவது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அதற்குள்ளாகவே இந்திய அணி 42 ரன்கள் எடுத்துவிட்டது. அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், சாம்சனுடன் இணைந்து அந்த அதிரடியைத் தொடர்ந்தார்.

நான்காவது ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்து இருந்தாலும், 5வது ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து கவுன்ட்டர் அட்டாக் செய்தார். ஆனால், அவர் அதோடு மட்டும் நிற்கவில்லை.

அடுத்து பந்தில் சிக்ஸர், அதற்கடுத்த பந்திலும் சிக்ஸர், நான்காவது பந்தில் பவுண்டரி, என விக்கெட் விழுந்த அடுத்த 4 பந்தில் 20 ரன்கள் விளாசினார் சாம்சன்.

ரொமாரியோ ஷெப்பர்ட் வீசிய அடுத்த ஓவரின் கடைசி பந்தில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்து தன் அரை சதத்தையும் நிறைவு செய்தார் அவர். அதற்கு அவர் எடுத்துக்கொண்டது 21 பந்துகள்தான்.

இஷான் கிஷன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். சதமடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த சஞ்சு சாம்சன் 82 ரன்களில் வெளியேறினார். 41 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடித்தார்.
படக்குறிப்பு, சஞ்சு சாம்சன்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்திய அணி பவர்பிளேவை 79/1 என மிகச் சிறப்பாக முடித்தது. அதன் பிறகும் தொடர்ந்து ஒவ்வொரு ஓவரிலும் குறைந்தபட்சம் ஒரு பவுண்டரியோ, ஒரு சிக்ஸரோ அடிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

அதனால் 8.1 ஓவர்களில் 100 ரன்களை இந்திய அணி கடந்தது. ஷமார் ஜோசஃப் வீசிய 10வது ஓவரை பவுண்டரி அடித்து தொடங்கி வைத்தார் சாம்சன். அதே ஓவரை ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளோடு முடித்து வைத்தார் இஷான் கிஷன். அந்த ஓவரில் 20 ரன்கள் எடுக்கப்பட, 10 ஓவர்களில் இந்திய அணி 127 ரன்கள் குவித்தது. ரன்ரேட் 12.7 என்ற அளவில் இருந்தது.

அதன் பிறகு அந்த ரன்ரேட்டை இந்தியா தொடர்ந்து தக்கவைத்து. இஷான் கிஷன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த சஞ்சு சாம்சன் 82 ரன்களில் வெளியேறினார். 41 பந்துகளைச் சந்தித்த அவர் 9 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடித்தார்.

கடைசி கட்டத்தில் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், திலக் வர்மா இருவரும் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக அடித்தார்கள்.

இருவரும் ஒரே மாதிரியாக தலா 18 பந்துகளைச் சந்தித்து 3 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடித்தார்கள். ஸ்ரேயஸ் ஐயர் 40 ரன்களில் ஆட்டமிழக்க, திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார். அதனால் 249 ரன்கள் குவித்தது இந்திய அணி.

4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹோப், ரதர்ஃபோர்ட் இருவரும் இன்னும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

ஹோப் கொடுத்த நம்பிக்கை

மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. முதல் ஓவரிலேயே கமில் பூரன், ஷிம்ரான் ஹிட்மெயர் இருவரையும் வெளியேற்றினார் மயாங்க் யாதவ்.

அடுத்து வந்த ரோவ்மான் பவெல், ஷாய் ஹோப் இருவரும் ஒரு சிறிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். 24 ரன்கள் எடுத்திருந்த பவெலையும் மயாங்க் யாதவ் வெளியேற்றினார். மேற்கிந்திய தீவுகள் அணி பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்தது.

நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹோப், ரதர்ஃபோர்ட் இருவரும் இன்னும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இந்தக் கூட்டணி 9 ஓவர்களில் 120 ரன்கள் விளாசியது. 37 பந்துகளில் 84 ரன்கள் எடுத்த ரதர்ஃபோர்ட், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவர் 7 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடித்தார். அதன் பிறகு வந்த ரொமாரியோ ஷெபர்டும் தங்கள் கேப்டனோடு சேர்ந்து அதிரடி காட்ட, 18.3 ஓவர்களிலேயே மேற்கிந்திய தீவுகள் அணி வென்றுவிட்டது.

ஹோப் 45 பந்துகளில் 102 ரன்கள் குவித்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். அவர் 6 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் அடித்து தன் அணியை மிகப் பெரிய வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்தப் போட்டியில் 501 ரன்கள் எடுக்கப்பட்டது. சாம்சன், ஹோப், ரதர்ஃபோர்ட், திலக் வர்மா, ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் எனப் பலரும் ரன் மழை பொழிந்தார்கள். ஆனால், இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றதற்கும், இந்தியா தோற்றதற்கும் பந்துவீச்சே மிக முக்கியக் காரணம். பவர்பிளேவில் அபிஷேக் விக்கெட்டை வீழ்த்திய அவர், பின்னர் இஷான், துபே ஆகியோரையும் வெளியேற்றினார்.

சேஸ் வீசிய இந்த ஸ்பெல் தான் இந்தியாவின் அதிவேகப் பயணத்துக்கு ஆங்காங்கே சிறு வேகத்தடைகளை ஏற்படுத்தியது. இல்லாவிட்டால் இந்திய அணி குறைந்தபட்சம் 20 ரன்களாவது எடுத்திருக்கும். அது மேற்கு இந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு சவாலாக அமைந்திருக்கலாம்.

சேஸுக்கு முன் மாற்றம் ஏற்படுத்திய சேஸ்

இந்தப் போட்டியில் மொத்தம் 13 பேர் பந்து வீசினார்கள். அதில் 12 பந்து வீச்சாளர்களின் எகானமி பத்துக்கும் அதிகமாகவே இருந்தது. மீதமிருந்த ஒரேயொரு பந்து வீச்சாளரான ராஸ்டன் சேஸின் எகானமி 6. ஆம், 501 ரன்கள் குவிக்கப்பட்ட போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.

சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய ஷிவம் துபேவால்கூட சேஸை இந்தப் போட்டியில் சிறப்பாக எதிர்கொள்ள முடியவில்லை. சேஸ் பந்துவீச்சில் 7 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 ரன்களை மட்டுமே எடுத்தார். தனது விக்கெட்டையும் அவரிடமே இழந்தார். ஒரு பந்தை தூக்கிப் போடுவது, அடுத்த பந்தை ஃபுல்லாக வேகமாக வீசுவது என மாற்றங்களைச் செய்துகொண்டே இருந்தார். அப்படி அவர் வேகமாக ஃபுல்லாக வீசிய பந்துதான் துபேவின் விக்கெட்டை வீழ்த்தியது.

"மேற்கிந்திய தீவுகள் அணி பெற்ற இந்த வெற்றியில் மற்றவர்களின் பங்களிப்புக்கு இணையானது ராஸ்டன் சேஸ் பங்களிப்பு" என அவரது ஸ்பெல் பற்றித் தனது எக்ஸ் பக்கத்தில் புகழ்ந்திருந்தார் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இயான் பிஷாப்.

சேஸ் வீசிய இந்த ஸ்பெல்தான் இந்தியாவின் அதிவேக பயணத்துக்கு ஆங்காங்கே சிறு வேகத்தடைகளை ஏற்படுத்தியது. இல்லாவிட்டால் இந்திய அணி குறைந்தபட்சம் 20 ரன்களாவது கூடுதலாக எடுத்திருக்கும். அது மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு சவாலாக அமைந்திருக்கலாம்.

சேஸ் பந்துவீச்சு பற்றி போட்டி முடிந்த பிறகு பேசிய மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ஷாய் ஹோப், "இப்படிப்பட்ட ஒரு ஆடுகளத்திலும் மைதானத்திலும், ஒரு ஓவருக்கு ஆறு ரன்களுக்கும் குறைவாகக் கொடுப்பது நம்ப முடியாதது. அவர்தான் நாங்கள் ஆட்டத்திற்குள் இருக்கக் காரணமாக அமைந்தார். பந்துவீசுவதற்கு மிகவும் கடினமான சூழ்நிலை நிலவியது. அவர் எங்களை ஆட்டத்திற்குள் தக்கவைத்த விதம், இந்த இலக்கை நாங்கள் எளிதாகத் துரத்திப் பிடிக்க உதவியது" என்றார்.

ராஸ்டன் சேஸ் போன்றதொரு ஸ்பெல்லை இந்திய பௌலர்கள் யாராலும் கொடுக்க முடியவில்லை.

தொடர்ந்து சறுக்கும் பௌலிங் சோதனை

ராஸ்டன் சேஸ் போன்றதொரு ஸ்பெல்லை இந்திய பௌலர்கள் யாராலும் கொடுக்க முடியவில்லை. ஒருவர்கூட 11க்கும் குறைவான எகானமியில் பந்துவீசவில்லை. இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், இன்னும் 3 பௌலர்கள், 3 ஆல் ரவுண்டர்கள் திட்டத்தோடுதான் இந்தியா களமிறங்குகிறது.

ஆனால், அந்த 3 ஆல்ரவுண்டர்களில் அக்‌ஷர் தவிர்த்து மற்ற இருவரும் அதிகம் பந்துவீசுபவர்கள் அல்ல. அதுமட்டுமல்லாமல், முற்றிலும் பேட்டிங்குக்கு சாதகமான ஒரு ஆடுகளத்தில் பந்துவீசுவது அந்த பௌலர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். ஒரு கூடுதல் பௌலர் இல்லாதபோது, அது இந்த பௌலர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

இரு ஓவர்கள் பந்துவீசிய துபே 30 ரன்கள் கொடுத்தார். நமன் திர் பந்து வீச்சிலும் 2 ஓவர்களில் 25 ரன்கள் எடுக்கப்பட்டன. அது இந்திய அணிக்கு பாதகமாகவே அமைந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் இருக்கிறது. மூன்றாவது போட்டி இந்தூரில் 11ஆம் தேதி நடக்கவுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு