இலங்கை: கொழும்புவில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் நீர்த்தாரை பிரயோகம்

காணொளிக் குறிப்பு, கொழும்புவில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் நீர்தாரை பிரயோகம்
இலங்கை: கொழும்புவில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் நீர்த்தாரை பிரயோகம்

கொழும்பு - நகர மண்டபம் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் நீர்தாரை பிரயோகம் நடத்தினர்.

பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்ற பிரச்னைகள் தொடர்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு வருகைத் தந்தனர்.

வீதியின் நடந்து வந்த மாணவர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு செல்ல அனுமதிக்காது தடைவிதித்தனர்.

தமது பிரச்னைகளை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தும் ஒரே இடம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எனவும், அங்கு செல்ல தமக்கு ஏன் அனுமதிக்க வழங்கவில்லை எனவும் மாணவர்கள் போலீஸாரிடம் கேள்வி எழுப்பினர்.

எனினும், எந்தவித பதிலையும் வழங்காது, மாணவர்களை செல்லது தடுத்து நிறுத்தினர்.

கொழும்புவில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் நீர்தாரை பிரயோகம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: