பிபிசி வாட்ஸ்ஆப் சேனல்கள் மற்றும் கம்யூனிட்டீஸ் தனியுரிமை அறிவிப்பு

உங்கள் நம்பிக்கை எங்களுக்கு மிகவும் முக்கியம். இதன் பொருள் உங்கள் தனிநபர் தரவுகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை பாதுகாப்பதில் பிபிசி உறுதிபூண்டுள்ளது என்பதே. இந்த அறிவிப்பை நீங்கள் படிப்பது முக்கியம். ஏனெனில், தனிநபர் தரவை நாங்கள் எப்படி, ஏன் பயன்படுத்துகிறோம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். இந்தத் தனியுரிமை அறிவிப்பு, தரவுகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் போதும், அதன் பின்னரும் உங்களைப் பற்றிய தனிநபர் தரவை நாங்கள் எவ்வாறு சேகரித்து, பயன்படுத்துகிறோம் என்பதை விவரிக்கிறது.

எந்த தனிநபர் தரவை பிபிசி சேகரிக்கும்? அதை எப்படி பயன்படுத்தும்?

எமது சேனல் மற்றும் கம்யூனிட்டீஸில் இணைவதற்கும் பின்தொடர்வதற்கும் நீங்கள் அளிக்க முடிவு செய்த தனியுரிமை தகவல்களை பிபிசி சேகரித்து செயலாக்கம் செய்யும். அதில் கீழே பட்டியலிடப்பட்டவையில் சில தகவல்களோ அல்லது அனைத்துமோ உள்ளடங்கியிருக்கலாம்.

தனிநபர் தரவுகள்

பின்வரும் தரவுகள் சேகரிக்கப்படலாம்

  • உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கின் பெயர்
  • உங்கள் தொடர்பு எண், மொபைல் எண் போன்றவை
  • முகப்பு படங்கள்

உங்கள் முகப்பு படத்தின் தன்மை மற்றும் உங்கள் தனியுரிமை செட்டிங்ஸைப் பொருத்து, பிபிசி முக்கியமான தகவலைச் சேகரித்து செயலாக்கம் செய்யும். இவை நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பிய சிறப்பு வகைத் தரவு என்று அழைக்கப்படுகிறது. அதற்கான உதாரணங்கள் கீழ்காணுமாறு:

  • உங்கள் இனம்
  • உங்கள் உடல்நிலை பற்றிய தகவல்
  • உங்கள் மத அல்லது தத்துவம் சார் நம்பிக்கைகள்
  • உங்கள் பாலியல் விருப்பத் தேர்வு பற்றிய தகவல்
  • அரசியல் கருத்து

உங்கள் முகப்புப்படம் பற்றிய தகவல்கள் பகிரப்படமால் இருக்க என்ன செய்ய வேண்டும்?

உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கின் முகப்பு படத்தை அனைவரும் பார்க்கக் கூடிய வகையில் உங்கள் தனியுரிமை செட்டிங்ஸ் இருந்தால் பிபிசியாலும் இந்த விவரங்களைப் பார்க்க முடியும். எனவே எங்களுடன் வாட்ஸ்ஆப் மூலம் நீங்கள் பகிரும் தனிநபர் தகவலைக் குறைக்க, உங்கள் தனியுரிமை செட்டிங்ஸை 'தொடர்புகளுக்கு மட்டும்' (contacts only) என மாற்றுமாறு ஊக்குவிக்கிறோம்.

தரவுக் கட்டுப்பாட்டாளர் யார்?

பிபிசி ஒரு சுயாதீன தரவுக் கட்டுப்பாட்டாளர். பிபிசியின் சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள, நீங்கள் எங்களுக்கு அளித்த தனிநபர் தகவல்களை பிபிசி கையாளும்.

வாட்ஸ்ஆப் ஒரு சுயாதீன தரவுக் கட்டுப்பாட்டாளர். நீங்கள் செயலியில் அனுப்பும் எந்தவொரு தரவையும் வாட்ஸ்ஆப் சுயாதீனமாகக் கையாளும். எனவே நீங்கள் வாட்ஸ்ஆப்பின் தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளுக்கும் உட்பட்டவர் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். உங்கள் தரவை மெட்டா நிறுவனங்களுக்குள் வாட்ஸ்ஆப் பகிரலாம்.

என்ன வகையான தரவு செயலாக்கம் செய்யப்படும், எப்படி கையாளப்படும், தரவுகள் எப்படி பயன்படுத்தப்படும், என்பது தனித்தனித் தரவுக் கட்டுப்பாட்டாளர்களால் (வாட்ஸ்ஆப்/ பிபிசி) தீர்மானிக்கப்படும்.

பிபிசியை பொருத்தவரை, இந்த தனியுரிமை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மட்டுமே பிபிசி வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடரும் உங்கள் தனிநபர் தகவல்கள் பிபிசியால் சேகரிக்கப்பட்டு செயலாக்கம் செய்யப்படும். தரவுகளைக் கையாளும் ஒவ்வொருவரும் தரவுகள் பாதுகாப்புச் சட்டத்துக்கு இணங்க வேண்டும், மேலும், முறையாக சட்டத்தைப் பின்பற்றுவதை வெளிக்காட்டும் பொறுப்பும் உள்ளது.

உங்கள் தனிநபர் தரவை செயலாக்கம் செய்வதற்கான சட்டப்பூர்வ அடிப்படை

உங்கள் தனிநபர் தரவை நாங்கள் பயன்படுத்த உங்கள் ஒப்புதலைச் சார்ந்திருக்கிறோம்.

ஏனெனில், எங்கள் வாட்ஸ்ஆப் சேனல் பிராட்காஸ்ட்டில் இணைய நீங்கள் விருப்பப்பட்டு முடிவெடுத்துள்ளீர்கள். சேனலில் இருந்து செய்திகள் பெறுவதை நிறுத்த விரும்பினால், எந்த நேரத்திலும் சேனலில் இருந்து நீங்களே உங்களை நீக்கம் செய்துகொண்டு உங்கள் ஒப்புதலை திரும்பப் பெறலாம்.

தரவுகள் பகிர்வு

உங்கள் அனுமதி இல்லாமல் உங்களது தனிநபர் தரவுகளை எந்தவொரு மூன்றாவது தரப்புடனும் பிபிசி பகிராது.

உங்கள் தகவலை தக்கவைத்திருத்தல்

இந்த தனியுரிமை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அவசியமான காலத்திற்கு உங்கள் தனிநபர் தரவை பிபிசி பயன்படுத்தும்.

உங்கள் உரிமை மற்றும் கூடுதல் தகவல்கள்

பிரிட்டன் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உங்களுக்கான உரிமைகள் உள்ளன. உங்களைப் பற்றி பிபிசி சேமிக்கும் தரவின் நகலை நீங்கள் கோரலாம். அதில் உங்கள் பிபிசி கணக்கு தரவு மற்றும் மேலே விவரிக்கப்பட்ட தரவு ஆகியவையும் அடங்கும்.

மின்னஞ்சல் முகவரி [email protected] மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களிடம் கேள்விகள் இருந்தால் அல்லது உங்கள் உரிமைகள் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய விரும்பினால், http://www.bbc.co.uk/privacy இல் BBCஇன் தனியுரிமை மற்றும் குக்கீகள் கொள்கையை படிக்கவும்.

பிபிசி உங்கள் தனிநபர் தகவல்களைக் கையாளும் விதம் குறித்து உங்களுக்கு கவலை இருந்தால், பிரிட்டனில் உள்ள தகவல் ஆணையர் அலுவலகம் (ICO) https://ico.org.uk/ இல் உங்கள் கவலையைத் தெரிவிக்கலாம்.

தனியுரிமை அறிவிப்பை புதுப்பித்தல்

உங்கள் தனிநபர் தரவை நாங்கள் பயன்படுத்தும் விதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருந்தால் தனியுரிமை அறிவிப்பை நாங்கள் திருத்துவோம்.