பக்ரீத் தினத்தன்று முஸ்லிம்கள் விலங்குகளை பலியிடுவது ஏன்?
பக்ரீத் பண்டிகையின் போது, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் வெவ்வேறு விதமான கால்நடைகளை பலியிடுவதை சடங்காக கடைபிடித்துவருகின்றனர். வழக்கமாக, தனக்குத் தேவையானதை விட அதிக சொத்துகளை வைத்திருக்கும் ஒருவர், இந்த செயலை செய்வது கட்டாயம்.
கால்நடைகளை பலியிடுவது குறித்து மற்ற மதங்களில் உள்ள நடைமுறைகள் என்ன? விலங்குகளை பலியிடுவது குறித்து இந்து, யூத, கிறித்துவ மதங்கள் என்ன சொல்கின்றன?
இஸ்லாம் மதத்தின் வரலாற்றில், யூத மற்றும் கிறித்துவ மதங்களுடன் ஒத்துப்போகும் பல விஷயங்கள் உள்ளன.
யூத திருமறைகளில் பல்வேறு காலங்கள் மற்றும் இடங்களில் பலவிதமான பலியிடல்கள் குறித்துக் கூறப்பட்டுள்ளதாக, பிரிட்டனின் லியோ பேக் கல்லூரியின் கல்வித்துறை தலைவர் ரப்பி கேரி சோமெர்ஸ் கூறுகிறார்.
"இத்தகைய சடங்குகளை மேற்கொள்வதற்கான ஆலயங்கள் இப்போது இல்லை என்பதால், இப்போது பலியிடும் வழக்கத்தைக் கடைப்பிடிப்பதில்லை. அதற்கு பதிலாக, இத்தகைய தியாகங்களை நாங்கள் பிரார்த்தனையின் வாயிலாக நினைவுகூர்கிறோம்," என்கிறார் அவர்.
கிறித்துவ மதத்தைப் பொறுத்தவரை, "பழைய ஏற்பாட்டில் குறிப்பாக லேவியஸ் 17, இணைச்சட்டம் (Deuteronomy) ஆகியவை, எப்படி விலங்கு பலியிடப்பட வேண்டும் என்பதை விவரிக்கின்றன. அதாவது காலை மற்றும் மாலை வேலைகளிலும் பல்வேறு விழாக்களின் போதும் எப்படி நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடுகிறது," என்கிறார், தாக்காவில் உள்ள கஃருல் கத்தோலிக்க தேவாலயத்தின் போதகர் டாக்டர் புரொஷாண்டோ டி ராபெய்ரோ.
அந்த காலத்தில், பலியிடல்கள் ஒரு குற்றத்திற்காக மனம் வருந்தும் விதமாகவும் எதிர்மறை மனப்போக்குகளுக்கு மன்னிப்பு கேட்கும் விதமாகவும் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், இயேசு கிறிஸ்துவின் மரணம் உச்சபட்ச தியாகமாக கருதப்பட்டதால் இந்த நடைமுறை இப்போது கடைபிடிக்கப்படுவதில்லை. இயேசு 'தேவ ஆட்டுக்குட்டியாக' கிறிஸ்தவ மதத்தில் பார்க்கப்படுகிறார்.
இந்து மதத்தில் விலங்குகளை பலியிடுவது குறித்த விவாதங்கள் நடைபெறுகின்றன என்றாலும், பலதரப்பு இந்துக்களால் இந்த வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு இந்தியா அல்லது வங்கதேசத்தில் துர்க்கை பூஜை மற்றும் காளி பூஜை உள்ளிட்ட மத சடங்குகளின் போது விலங்குகள் பலியிடப்படுகின்றன.
முழு விவரம் காணொளியில்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



