You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புலாவ் சாப்பிட்டால் பாலியல் சக்தி அதிகரிக்குமா? அதில் அப்படி என்ன சிறப்பு?
உஸ்பெகிஸ்தானின் பிரியமான தேசிய உணவான புலாவ் (Plov), பாலுணர்வைத் தூண்டும் குணங்களைக் கொண்டிருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. அதனால், அந்நாட்டில் கருத்தரிக்க உகந்த நாளாக பரவலாக கருதப்படும் வியாழக்கிழமைகளில் இந்த உணவு உண்ணப்படுகிறது.
அரிசி, காய்கறிகள், இறைச்சி மற்றும் மசாலாப் பொருட்களின் கலவைதான் புலாவ். இது பட்டுப்பாதை நாடுகள் அனைத்திலும் பிரபலமானது. ஆனாலும் இது உஸ்பெகிஸ்தானுடன் மிகவும் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது. வாரத்திற்கு ஒரு முறையாவது பரவலாக உட்கொள்ளப்படும் புலாவ், அந்த நாட்டின் தேசிய உணவாகும். குடும்ப விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் இன்றியமையாத இடத்தையும் புலாவ் பிடித்துள்ளது.
குழந்தை பிறப்பு, திருமணம், இறுதிச் சடங்கு மற்றும் ஹஜ் பயணத்தில் இருந்து திரும்பும் முஸ்லிம்களை கௌரவிக்கவும் இந்த உணவு பரிமாறப்படுகிறது.
புலாவ் முதன்முதலில் 'மாவீரன் அலெக்சாண்டர்' கேட்டுக்கொண்டதற்கு இணங்க உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மத்திய ஆசியாவில் தனது படையெடுப்புகளின்போது ராணுவ வீரர்கள் நல்ல வலுவுடன் தாக்குப்பிடிக்கும் விதமாக இருக்கும்படியான ஒரு திருப்திகரமான உணவை உருவாக்கும்படி அவர் உத்தரவிட்டார் என்றும் அதன் தொடர்ச்சியாக புலாவ் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. "அதை நிரூபிப்பதற்கான வரலாற்று பதிவுகள் நம்மிடம் இல்லை. ஆனால் 9 மற்றும் 10-ஆம் நூற்றாண்டுகளுக்குள் புலாவ் இங்கு மிகவும் பிரபலமாகிவிட்டது என்பது எங்களுக்கு தெரியும்," என்கிறார் உணவு வரலாற்றில் ஆர்வமுள்ள உஸ்பெக் சுற்றுலா வழிகாட்டி நிலுஃபர் நூரிடினோவா.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)