காணொளி: 'ஆட்சியமைக்க விஜய் ஆதரவு கேட்டார் -' காங்கிரஸ் கட்சியின் பதில் என்ன?

காணொளிக் குறிப்பு, ஆட்சியமைக்க விஜய் ஆதரவு கேட்டார் - கே.சி. வேணுகோபால்
காணொளி: 'ஆட்சியமைக்க விஜய் ஆதரவு கேட்டார் -' காங்கிரஸ் கட்சியின் பதில் என்ன?

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியிடம் விஜய் ஆதரவு கேட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும், பாஜக அங்கம் வகிக்கும் அரசு அமைந்து விடக்கூடாது" என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ''காமராஜரின் கொள்கைகளை விஜய் ஏற்றுக்கொண்டிருப்பதால், விஜயின் கோரிக்கை தொடர்பாக இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் வழங்கியுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு