You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான்- இஸ்ரேல் மோதலில், வெளிப்படையாக இஸ்ரேலை ஆதரிக்க இந்தியா தயங்குவது ஏன்?
கடந்த வாரம் இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், உலகமே இரு துருவமாக பிரிந்திருக்கிறது. இந்நிலையில், ஏதோ ஒரு சார்பை எடுப்பது இந்தியாவுக்கு சுலபமாக இருக்கவில்லை. ஆனால் ஒரு மாதத்துக்கு முன், பாகிஸ்தானின் சில பகுதிகளை இந்தியா தாக்கியபோது, இஸ்ரேல் வெளிப்படையாக இந்தியாவை ஆதரித்தது.
பாகிஸ்தான் இன்னும் இஸ்ரேலை ஒரு நாடாக கூட அங்கீகரிக்காத நிலையில், இந்தியாவை ஆதரிப்பது இஸ்ரேலுக்கு சுலபமானதாக இருந்தது. ஆனால் மறுபுறம், இரானுடன் இந்தியாவுக்கு நல்லுறவு இருப்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையே மிகச் சிறப்பான உறவு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவில் இருக்கும் பாரதிய ஜனதா அரசு மற்ற அரசுகளை விட இஸ்ரேலிடம் மிக தளர்வாக நடந்துகொண்டிருக்கிறது. இருப்பினும், மேற்கு ஆசியாவை பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாடு யார் ஒருவர் பக்கமும் சார்பெடுப்பதை விட இருதரப்பையும் சமமாக நடத்துவதில் குறியாக இருந்திருக்கிறது.
இந்தியா இஸ்ரேல் தரப்புக்கு கூடுதல் சாதகமாக இருக்கிறது என்று கூறும் அளவுக்கான பல சம்பவங்கள் கடந்த நான்கு நாட்களில் நடந்துள்ளன.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு